முட்டை விலை 15 காசுகள் விலை, 4 ரூபாய் 60 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாய் 45 காசுகளிருந்து, ஒரே நாளில் 15 காசுகள் விலை உயர்த்தி 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த வாரம் முட்டை பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி 30 காசுகள் விலை குறைக்கப்பட்ட நிலையில் இன்று 15 காசுகள் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து முட்டை விலை ஏற்ற, இறக்கங்களுடன் ஊசாலடுவது குறித்து கோழி பண்ணையாளர்கள் கூறும் போது கோடைக் காலத்தை ஒட்டி அதிகளவு வயதான கோழிகள் விற்கப்பட்ட நிலையில் முட்டை உற்பத்தி குறைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்து தேவை ஏற்பட்டதோடு, வட மாநிலங்களிலும் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திலும் விலை உயர்த்தப்படுவதாகவும், வரும் நாட்களில் இவ்விலை நீடிக்கவே வாய்ப்புகளே உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிக்கலாம்: டிக்கெட் இன்றி ரயில் முன்பதிவு பெட்டியில் ஏறி வடமாநிலத்தவர்கள் அட்டகாசம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM