சென்னை புரசைவாக்கம் வள்ளியம்மாள் தெருவில் உள்ள விநியோகக் குழாயில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நகரின் சில பகுதிகளில் மே 27-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மே 29-ஆம் தேதி காலை 10.30 மணி வரை குடிநீர் விநியோகம் இருக்காது என சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
🔖CMWSSB சார்பில் பிரதானக் குழாயில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 27.05.2022 அன்று காலை 10.30 மணி முதல் 29.05.2022 காலை 10.30 மணி வரை பகுதி-5, பகுதி-6, பகுதி-8 மற்றும் பகுதி-9-க்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.#CMWSSB pic.twitter.com/98SBBcLvtE
— Chennai Metro Water (@CHN_Metro_Water) May 25, 2022
இதனால், வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கொண்டித்தோப்பு, சவுகார்பேட்டை, ஏழுகிணறு, ஜார்ஜ் டவுன், பிராட்வே, பெரம்பூர், புதுப்பேட்டை, புளியந்தோப்பு, கெல்லிஸ், நம்மாழ்வார்பேட்டை, புரசைவாக்கம், செம்பியம், ஓட்டேரி, அயனாவரம், கீழ்ப்பாக்கம் கார்டன், சேத்துபட்டு, டி.பி. சத்திரம், வில்லிவாக்கம் மற்றும் திருவல்லிக்கேனி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் போதுமான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நீர் விநியோகத்திற்கு, பகுதி பொறியாளர்களை 8144930905, 8144930906, 8144930908 மற்றும் 8144930909 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“