Realme: 48MP கேமரா கொண்டிருக்கும் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி விற்பனை தொடக்கம்!

Realme:
ரியல்மி
அதன் சக்திவாய்ந்த Narzo 50 Pro 5G ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த போனின் விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. போன் பாக்ஸி வடிவமைப்பு, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், செல்ஃபி ஷூட்டருடன் வருகிறது.

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி
போனின் முதல் விற்பனை ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் மற்றும் ரியல்மி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நடைபெறுகிறது.

Telecom: சிம்கார்டு வாங்க இனி ரூ.1 செலுத்தினால் போதும் – புதிய விதிமுறைகள் அமல்!

ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் போன் வாங்கினால் ரூ.2,000 உடனடி தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. இதுகுறித்த மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி விலை மற்றும் சலுகைகள் (Realme Narzo 50 Pro 5G Price and Offers)

Realme Narzo 50 Pro 5G ஸ்மார்ட்போன் இரண்டு சேமிப்பு வகைகளில் வருகிறது. போனின் 6ஜிபி + 128ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.21,999 ஆகவும், 8ஜிபி + 128ஜிபி வகையின் விலை ரூ.23,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Xiaomi Mi Band: விற்பனையில் புரட்சி செய்த Mi பேண்டின் அடுத்த மாடல் ரிலீஸ்!

இன்று முதல் இந்த ஸ்மார்ட்போன் பயனர்கள் வாங்கலாம். போனை வாங்கும் போது HDFC வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 2,000 ரூபாய் நேரடி தள்ளுபடி கிடைக்கும். சுலப மாதத் தவணைத் திட்டத்தில் ரூ.1,036 செலுத்தியும் இந்த போனை வாங்கலாம்

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme Narzo 50 Pro 5G Specifications)

புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் 90Hz ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.42″ இன்ச் FHD+ Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. பல பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள மீடியாடெக் டிமென்சிட்டி 920 5G சிப்செட்டை ஆதரிக்கிறது.

Redmi: 144Hz டிஸ்ப்ளே, 64MP சாம்சங் கேமரா – ரெட்மி நோட் 11டி ப்ரோ+ அறிமுகம்!

போனில் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Realme UI 3.0 ஸ்கின் நிறுவப்பட்டுள்ளது. போனின் பின்புறத்தில் மூன்று கேமரா கொண்ட அமைப்பு உள்ளது. இதில் 48MP மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8MP மெகாபிக்சல் அல்ட்ராவைட் சென்சார், 2MP மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

வீடியோ அழைப்புகள், செல்ஃபிக்களுக்காக 16MP மெகாபிக்சல் முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த 5000mAh பேட்டரியுடன் 33 வாட் வேகமான சார்ஜிங் ஆதரவு பயனர்களுக்கு கிடைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.