உக்ரைன் படைகளுக்கு எதிராக போரிட்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஷ்ய வீரர்களை அதிபர் புதின் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற ரஷ்ய அதிபர் புதின், அங்கு சிகிச்சை பெற்று வரும் ரஷ்ய வீரர்களை சந்தித்து, கைகளை குலுக்கி அவர்களின் சேவைக்கு நன்றி தெரிவித்தார்.