பீஜிங் : சீனாவில் உய்கர் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை குறித்து புகார்கள் உள்ளன. இது தொடர்பாக ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சல் பேச்சலட் சீனாவின் குவான்ஸோ மாகாணம் சென்றுள்ளார். அவருடன், ஷீ ஜிங்பிங் நேற்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக பேசினார்.
இதுகுறித்து சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சீன அரசும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக, ஷீ ஜிங்பிங், மிச்சல் பேச்சலட்டிடம் தெரிவித்தார். மேலும், மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்னைகளை எடுத்துக் கொண்டால் எந்த நாடும் முழுமையாக செயல்படுவதாக கூற முடியாது.
மனித உரிமை மீறல் தொடர்பான சிறிய பிரச்னைகள் கூட அரசியல் ஆக்குவதற்கும், இரட்டை அணுகுமுறையை கடைபிடிப்பதற்கும், அன்னிய நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான உபதேசங்கள் எங்களுக்கு தேவையில்லை என, ஷீ ஜிங்பிங் கூறினார், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement