OnePlus 10R 5G: ஒன்பிளஸ் ஃபேன்ஸ்… ஒன்பிளஸ் 10R இப்போது ரூ.13,000 தள்ளுபடி விலையில்!

OnePlus 10R 5G: ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது ஒப்போவுடன் கூட்டு சேர்ந்து அதிகளவிலான ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்கிறது. இந்த ஆண்டு மட்டும் நிறுவனம் மூன்று போன்களை அறிமுகம் செய்துவிட்டது.

அந்த வகையில், சமீபத்தில் வெளியான ஒன்பிளஸ் 10R 5G ஸ்மார்ட்போன் சலுகைகளுடன் கிடைக்கிறது. ஸ்மார்ட்போனின் அடிப்படை வகையின் விலை ரூ.38,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை எப்படி ரூ.25,500க்கு வாங்கலாம் என்று பார்க்கலாம்.

Redmi: 144Hz டிஸ்ப்ளே, 64MP சாம்சங் கேமரா – ரெட்மி நோட் 11டி ப்ரோ+ அறிமுகம்!

ஒன்பிளஸ் 10R 5ஜி விலை மற்றும் சலுகைகள் (OnePlus 10R 5G Price and Offers)

மொத்தம் மூன்று வேரியண்டில் ஒன்பிளஸ் 10R 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. அதில் 80W சூப்பர் VOOC சார்ஜிங் உடன் வரும் 8ஜிபி + 128ஜிபி வகை ரூ.38,999 ஆகவும், 12ஜிபி + 256ஜிபி வகை ரூ.42,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 150W வாட் சூப்பர் VOOC சார்ஜிங் அம்சத்துடன் வரும் டாப் வேரியண்ட் போனின் விலை ரூ.43,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களை அமேசான் ஷாப்பிங் தளம் வழங்குகிறது.

iPhone 13: வெறும் ரூ.38,000 விலையில் லேட்டஸ்ட் ஐபோன்!

அதனடிப்படையில், ரூ.38,999க்கு விற்கப்படும் அடிப்படை மாடலை ICICI வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.2000 கேஷ்பேக் சலுகையுடன் வாங்கலாம். இதன்மூலம் போனின் விலை ரூ.36,999 ஆக குறையும்.

இதுமட்டும் இல்லாமல் அதிரடி எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. ரூ.11,050 வரை இந்த போனுக்கு எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி கிடைக்கிறது. நல்ல நிலையில் இருக்கும் பழைய ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்கும் பயனர்களுக்கு இந்த சலுகையும் கிடைக்கும்.

இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்தினால் போனின் விலை ரூ.25,949 ஆக குறையும். இதன் வாயிலாக திறனுள்ள புராசஸர், நல்ல கேமரா போனை வெறும் ரூ.26,000 செலவு செய்து வாங்க முடியுஜ்ம்.

ஒன்பிளஸ் 10R 5ஜி அம்சங்கள் (OnePlus 10R 5G Specifications)

OnePlus 10R 5G போனில் 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடன், 2400 X 1080 பிக்சல்கள் கொண்ட 6.7″ இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் திரை அடர்த்தி 394ppi ஆக உள்ளது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது.

Bill Gates: தல… என்ன போன் வெச்சிருக்கார் தெரியுமா – ஆனா சத்தியமா நீங்க நெனச்சது இல்ல!

ஸ்மார்ட்போனை திறன்மிக்கதாக மாற்றும் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 மேக்ஸ் சிப்செட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 12ஜிபி வரை ரேம், 256ஜிபி வரை ஸ்டேரேஜ் மெமரி ஆதரவை
ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி
ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

கேமராவைப் பொருத்தவரை பின்பக்கம் 50MP மெகாபிக்சல் Sony IMX766 OIS முதன்மை சென்சாராகவும், 8MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 2MP மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகிய டிரிப்பிள் ரியர் கேமரா டுயல் பிளாஷுடன் வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

மேலும், 16MP மெகாபிக்சல் Sony IMX471 சென்சார் செல்பி கேமராவாக செயல்படுகிறது. 5,000mAh பேட்டரியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன்கள் 80W, 150W என இரண்டு சூப்பர் VOOC சார்ஜிங் வகைகளுடன் கிடைக்கிறது.

OnePlus-10r-5G விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Dimensity 8100-MAXடிஸ்பிளே6.7 inches (17.02 cm)சேமிப்பகம்128 GBகேமரா50 MP + 8 MP + 2 MPபேட்டரி4500 mAhஇந்திய விலை38999ரேம்8 GBமுழு அம்சங்கள்
OnePlus-10r-5GOnePlus 10r 5G 256 GB 12 GB

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.