தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 25-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘தமிழக அரசு vs எதிர்க்கட்சிகள்… தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காக்கப்படுகிறதா? சீர்கெட்டிருக்கிறதா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
Vadivel Murugan
அது என்ன தமிழ் நாடு vs எதிர்க்கட்சி? ஆளும் கட்சிகாரர்களுக்கும் தெரியும் சீர்கெட்டு கிடக்கிறது என்று!! கேட்டால் முந்தைய ஆட்சியில் அப்படி இப்படி என்பார்கள்!! இந்த ஆட்சி பரவாயில்லை என்பார்கள்!!
Mahalingam
சட்டம் தன் கடமையை அருமையாக செய்கிறது.
Nellai D Muthuselvam
தமிழக அரசு எதிர்கட்சிகளையும் உள்ளடக்கியதுதான். தவறு செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் குற்றங்கள் எண்ணிக்கை பெருகி வருகின்றது. சட்டம் விரைவாக நடவடிக்கை எடுக்க தவறியதால் குற்றவாளிகள் தைரியமாக நடமாடுகின்றனர்
Jai Velu
சீர்குலைந்து கிடைக்கிறது என்பது 100க்கு 500 % உண்மைதான் என்று உறுப்பினர்கள் கூறியுள்ளனர் சார். உண்மை கசப்பு மருந்துபோல இருக்கும் சார். கோவம் வரும் சார் உண்மை சொன்னால், கஷ்டம் ஆ இருக்கும் சார்
Vishnu
Frankly speaking. Rowdism and katta panchayat is back. Ruling party members even in villages are having influence over police and with help of that they are doing anything they can. It’s really frustrating to see a good governance getting wasted because of this. People will know
Sam Jeyaraj
வேண்டும் என்று பிரச்னை உண்டாக்கி பின் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று சொல்லும் ஆட்கள் இருக்கும் வரை அப்படி தான்
இதையும் படிக்கலாம்: காங்கிரசில் பதவி கிடைக்காத விரக்தியில் இப்படி பேசுகிறார்! -வாசகர் கமெண்ட்ஸ்! #Like#DislikeSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM