ஆஃப்கன் குண்டுவெடிப்புகளில் பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்தது

ஆஃப்கானிஸ்தானில் நேற்று (2022, மே 25) நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. காபூல் மசூதி மற்றும் மசார்-இ-ஷரீப்பில் மூன்று மினி வேன்களை தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கியதில் 14 பேர் கொல்லப்பட்டனர். 

ஆஃப்கனின் மசார்-இ-ஷெரீப் பகுதியில் மினிவேன் குண்டு வெடிப்புகளில் பலர் காயமடைந்துள்ளனர். 

மினிவேன்களுக்குள் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக ஆப்கனின் பல்க் மாகாண தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிப் வசிரி தெரிவித்தார். மசார்-இ-ஷரீப் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் அனைவரும் சிறுபான்மை இன ஷிய இஸ்லாமிய இனத்தை சேர்ந்தவர்கள் என பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதன்கிழமையன்று ஆப்கானிஸ்தானில் மீண்டும் பல குண்டுவெடிப்புகள் நடைபெற்றதாக வெளியான செய்திகள் உலகத்தையே அதிர்ச்சியடையச் செய்தன. காபூலில், மசூதிக்குள் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது ஐந்து பேர், தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோதே உயிரிழந்தனர்.

மேலும் படிக்க | மரியுபோல் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் 200 சடலங்கள்

காபூலில் உள்ள மஸார்-இ-ஷெரிப் மசூதியில் மினிவேன்களைக் கொண்டு நடத்தப்பட்ட மூன்று குண்டுவெடிப்புகளில் சுமார் ஒன்பது பயணிகள் உயிரிழந்தனர் என்று தெரியவந்துள்ளது. 

மினிவேன் குண்டுவெடிப்புகளுக்கு, ஐ.எஸ் குழுவின் உள்ளூர் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த சற்று நேரத்திலேயே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று சமூக ஊடகங்களில் செய்தி வெளியிட்டது.

மேற்கத்திய நாடுகளுடன் இணக்கமாக இருந்த  அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது தலிபான்கள் இதுபோன்ற குண்டுவெடிப்புகளையும் தாக்குதல்களையும் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மேற்கத்திய நாடுகள் தடைக்கு பதிலடி; 113 விமானங்களை கைப்பற்றிய ரஷ்யா

தற்போது முன்பைப் போலவே ஆப்கனில் வெடிகுண்டு வெடிப்புகள் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

நகரின் மத்திய காவல் மாவட்டம் 4 இல் உள்ள ஹஸ்ரத் ஜகாரியா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில், காபூல் அவசர மருத்துவமனையில் இறந்தவர்கள் உட்பட 22 பேர் பாதிக்கப்பட்டனர்.

காபூலில் உள்ள தலிபான் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் கூறுகையில், “மாலை தொழுகைக்காக மக்கள் மசூதிக்குள் இருந்தபோது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

மஸார்-இ-ஷெரிப் தாக்குதலுக்கு சன்னி போராளிக் குழுவான ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது. மூன்று பேருந்துகளை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றாலும், காபூல் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.