இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு நிதி அளித்தாகக் கூறி தடைசெய்யப்பட்ட பிரிவினைவாத இயக்கமாகக் கூறப்படும் ‘ஜம்மு
காஷ்மீர்
விடுதலை முன்னணி’ தலைவர்
யாசின் மாலிக்
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இவர் மீது போடப்பட்ட வழக்கு டெல்லியில் நடந்து வந்தது. இவ்வேளையில், டெல்லி நீதிமன்றம் யாசின் மாலிக்கிற்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதனால் ஏற்படும் போராட்டங்கள், கலவரங்களைத் தடுக்க ஒன்றிய அரசு தற்போது காஷ்மீரில் இணைய சேவைகளை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் சேவையில் இருக்கும் அனைத்து மொபைல் இணைய வழங்கும் சர்வர்களும் முடக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், பிராட்பேண்ட், ஃபைபர் இணைய சேவைகள் பயன்பாட்டில் இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Mark Zuckerberg: பேஸ்புக் மார்க் கைது? டெக் துறையில் பரபரப்பு!
பிரச்னைகளை தவிர்க்க முடக்கப்படும் இணைய சேவை
யாசின் மாலிக்கிற்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எழும் பிரச்னைகளைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Telecom: சிம்கார்டு வாங்க இனி ரூ.1 செலுத்தினால் போதும் – புதிய விதிமுறைகள் அமல்!
கடந்த மாதம், பஞ்சாப் அரசு காலிஸ்தான் எதிர்ப்பு அணிவகுப்பு தொடர்பாக இரு குழுக்களுக்கிடையேயான மோதல்களில் நான்கு பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து, பாட்டியாலா மாவட்டத்தில் குரல் அழைப்புகள் தவிர மொபைல் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இணைய சேவைகளை இடைநிறுத்துவதற்கான உத்தரவு உள்துறை மற்றும் நீதித்துறையால் பிறப்பிக்கப்பட்டது. பாட்டியாலாவில் உள்ள காளி மாதா கோவிலுக்கு வெளியே மோதல் நடந்த இடத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Xiaomi Mi Band: விற்பனையில் புரட்சி செய்த Mi பேண்டின் அடுத்த மாடல் ரிலீஸ்!
அரசு உத்தரவு
அரசு தரப்பில் வெளியான உத்தரவில், “டெலிகாம் சேவைகள் (பொது அவசரநிலை அல்லது பொதுப் பாதுகாப்பு) விதிகள், 2017ஐ தற்காலிகமாக நிறுத்தி வைப்பதன் மூலம் எனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, உள்துறை மற்றும் நீதித்துறை முதன்மைச் செயலாளர் அனுராக் வர்மா ஆகிய நான், மொபைல் இணையச் சேவைகளை (2G/3G/4G/CDMA) இடைநிறுத்த உத்தரவிடுகிறேன்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
ஏப்ரல் 30 அன்று காலை 9:30 மணி முதல் மாலை 6 மணி வரை பாட்டியாலா மாவட்டத்தின் அதிகார வரம்பில் இருக்கும் மொபைல்களில் இருந்து குரல் அழைப்புகள் தவிர அனைத்து எஸ்எம்எஸ், இணைய சேவைகள் போன்றவை நிறுத்தப்படும்.” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இங்கு இம்மாதம் இரு குழுக்களுக்குள் மோதல் ஏற்பட்டதில், இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில் நான்கு பேர் காயமடைந்தனர். மேலும் காவல்துறையினர் வானத்தை நோக்கி சுட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.