குரங்கு அம்மை தொற்று குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள்,
கொரோனா தொற்று முதல் தவனை தடுப்பூசியை 93.76 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி என்பது 82.48 சதவீதம் பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை சுமார் 7.05 லட்சம் பயனாளிகள் பயன் அடைந்துள்ள நிலையில் ஜூன் 12ஆம் தேதி ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் குரங்கு அம்மை தோற்று இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை என்றும், இங்கிலாந்திலிருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறிகள் இருந்ததில், சோதனை முடிவு நெகட்டிவ் வந்துள்ளது. எனவே குரங்கு அம்மை நோய் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.