கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்கு பதில் முதல்வரே துணைவேந்தராக இருப்பார் என்று அமைச்சர் ப்ரத்யா பாசு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேரவையில் விரைவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சில நாட்களுக்கு முன்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.