கனடாவில் வீட்டில் இருந்து 15 வயது டீன் ஏஜ் பெண் காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பான தகவலை Saskatoon பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி Patience Kittiekaywinnie (15) என்ற இளம்பெண் கடந்த ஞாயிறு அன்று அவரது வீட்டில் கடைசியாக காணப்பட்டார்.
இதன்பின்னர் அவர் மாயமாகியுள்ளார்,
Kittiekaywinnie 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் ஆவார்.
அவரின் கண்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும் எனவும் 160 பவுண்ட் எடை கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது இடது மணிக்கட்டில் தேள் பச்சை குத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Kittiekaywinnie குறித்து அங்கு குடியிருப்பவர்களுக்கு தகவல் தெரிந்தால் தங்களுளிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.