விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இல்லத்தரசிகள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரின் விருப்பமான தொடராக உள்ளது. இது ‘கிருஷ்ணகோலி’ என்ற பெங்காலி சீரியலின் தழுவலாகும்.
பாரதி கண்ணம்மா சீரியலில், அருண் பிரசாத், வினுஷா தேவி, ஃபரினா ஆசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
அதில் கண்ணம்மாவாக நடித்து அனைவரின் இதயங்களையும் கட்டிப்போட்ட ரோஷினி ஹரிப்பிரியன் சீரியலில் இருந்து விலகினார். தற்போது, அவருக்கு பதிலாக புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.
இப்போது ரோஷினி குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில், 10 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருக்கிறார்.
ரோஷினியைத் தொடர்ந்து, அகிலன் கேரேக்டரில் நடித்த அகிலன் எஸ்பிஆர். பட வாய்ப்புகள் வந்ததால், சீரியலை பாதியிலேயே கைவிட்டு வெள்ளித்திரைக்கு போனார். தற்போது புது அகிலனாக’ சுகேஷ் ராஜேந்திரன் நடிக்கிறார்.
இதில் அகிலனின் மனைவி அஞ்சலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கண்மனி மனோகரன். இவரும், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து சமீபத்தில் விலகினார்.
கண்மனி இப்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும் ஒரு புதிய சீரியலிலும் நடிக்கிறார். அதன் புரோமோ கூட சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் கண்மனியின் இன்ஸ்டா போஸ்ட் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
அதில் கண்மனி, கரும்பச்சை நிற புடவை, சிவப்பு நிற ஜாக்கெட்டில், காதில் பெரிய ஜிமிக்கி மட்டும் அணிந்து பார்க்கவே அழகாக இருக்கிறார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதேபோல முன்னதாக கண்மனி பச்சை நிற ஜாக்கெட், கத்தரிப்பூ நிற கலர் புடவை, தலையில் கனகாமரம் பூ அணிந்து, கைகளில் சிவப்பு நிற வளையல்களுடன் பார்க்க 80ஸ் ஹீரோயினை போல இருக்கும் படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“