சமீபத்திய ஆண்டுகளாகவே கொரோனாவின் பிடியில் சிக்கித் சீரழிந்த விமானத் துறையானது, தற்போது தான் மீண்டு வரத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த ஏர் இந்தியா நிறுவனம் டாடா வசம் சென்றுள்ளது.
இந்த காலக்கட்டத்திலேயே கடன் பிரச்சனையால் முடங்கி போன ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஆகாசா ஏர் உள்ளிட்ட நிறுவனங்களும் மீண்டும் விமான சேவையில் நுழைந்துள்ளன.
ஜூலை 26 கடைசி.. ஏர் இந்தியா ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு..!
போட்டி அதிகரிக்கும்
இது விமானத் துறையில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஏனெனில் ஏற்கனவே செயல்பட்டு வரும் விமான நிறுவனங்கள் உடனே தங்களது வளர்ச்சியினை மேம்படுத்தும் வேலையில் குதிக்கலாம் என்றாலும், அவர்களுக்கு போட்டி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இது வாடிக்கையாளர்களுக்கு மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
குறைந்த கட்டண சேவை
ஏனெனில் இது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை வழங்க வகுக்கலாம். இது ஒரு விலை போரினை உருவாக்கலாம். வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஆப்சன்கள் கிடைக்கலாம். நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் குறைந்த கட்டணத்தில் பயண சேவையை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம்.
செலவினைக் குறைக்கலாம்
இதனால் நிறுவனங்கள் செலவினைக் குறைக்கும் நிலைக்கு தள்ளப்படலாம். இது நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஆகாசா ஏர்வேஸ் விமான சேவையின் தொடக்கமானது, வேலை வாய்ப்பினை ஊக்குவிக்கலாம். ஆனால் பலமடங்கு போட்டியினை அதிகரிக்கலாம்.
ஆகாசா ஏர்லைன்ஸ் & ஜெட் ஏர்வேஸ்
ஆகாசா ஏர்லைன்ஸ் 2023ம் ஆண்டில் 350 கேபின் பணியாளர்கள் மற்றும் விமானிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது பொருளாதாரத்திற்கு பெருமளவில் பயனளிக்கும் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இன்னும் மூத்த பணியாளர்களை பணியமர்த்தி வருகின்றது. இது பெருத்த கடன் பிரச்சனைக்கு மத்தியில் மறுபிறவி எடுத்துள்ளது. நிச்சயம் விமான துறையினருக்கு போட்டியாக அமையலாம்.
சம்பளம்
விமான துறையானது தேவை காரணமாக வேகமாக மீண்டு வந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் திறமைக்கு ஏற்ப சம்பளம் கிடைக்கலாம். அதேபோல இது பணியிடத்தினை பொறுத்தும் சம்பளம் அதிகரிக்கலாம். சராசரியாக ஒரு நுழைவு ஊழியருக்கு 4 முதல் 6 லட்சம் ரூபாய் வரை மொத்த இழப்பீடு பெறலாம். அனுபவம் வாய்ந்த கேபின் குழுவினர் சாரசரியாக 8 முதல் 12 லட்சம் ரூபாய் வரையில் எதிர்பார்க்கலாம்.
How Jet Airways, Akasa Air’s entry impact Aviation industry
Companies including Air India, Akasa Air and Jet Airways have re-entered the aviation sector. This is expected to cause stiff competition.