‘நாதஸ்வரம்’ தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. தொடர்ந்து ‘பாரதி கண்ணம்மா’, ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ போன்ற தொடர்களில் நடித்திருந்தார். அவருக்கும் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற அரவிந்த் சேகர் என்பவருக்கும் நாளை திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து காலை திருமணம் நடைபெற இருக்கிறது.
ஸ்ருதி கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் என்றாலும் அவருடைய திருமணம் சென்னையில் நடைபெறுகிறது. இந்தத் திருமண வரவேற்பில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர் கொஞ்சம் பிரேக் எடுத்திருந்தார். அவர் திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து சின்னத்திரையில் நடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஸ்ருதி – அரவிந்த் இருவரின் பேச்சுலர் பார்ட்டி நேற்று நடைபெற்றிருக்கிறது. இந்த பார்ட்டியில் ‘ரோஜா’ சீரியல் பிரபலம் பிரியங்கா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ காவ்யா, ‘நாதஸ்வரம்’ பென்ஸி உட்பட பல சின்னத்திரை பிரபலங்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அந்தப் புகைப்படங்களை ஸ்ருதி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இவர்களுடைய திருமணம் நாளை நடைபெற இருக்கிறது. திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க இருக்கும் ஸ்ருதி ‘என் வீட்டை மிஸ் செய்வேன்’ என உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.
வாழ்த்துகள் ஸ்ருதி – அரவிந்த்!