பிருத்விராஜ் படத்திற்காக 3 நகரங்கள் மறு உருவாக்கம்

யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் வரலாற்றுத் திரைப்படம் பிருத்விராஜ். மாவீரர், மன்னர் பிருத்விராஜ் சவுகானின் வாழ்க்கையையும், அச்சம் என்பதை அறியாத அவரது பராக்கிரமத்தையும் கூறும் கதையாகும். பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது முகமது கோரியின் இரக்கமற்ற படையெடுப்பை எதிர்த்து இந்தியாவைக் காப்பற்ற எழுச்சியுடன் போராடிய மாவீரன் பிருத்விராஜனின் கதை.

பிருத்விராஜாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். மனுஷி சில்லர் பிருத்விராஜின் அன்பிற்குரிய மனைவி சன்யோகிதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சானக்கியா தொடரை உருவாக்கிய டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி, இயக்கியுள்ளார். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜூன் 3ம் தேதி வெளிவரவுள்ளது.

இந்த படத்தின் கதை 12ம் நூற்றாண்டில் நடப்பதால் அப்போது இருந்த டெல்லி, அஜ்மீர், கன்னாவ் ஆகிய நகரங்களை மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள்.

இது குறித்து அக்ஷய் குமார் கூறியிருப்பதாவது: அனைவரும் பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற உறுதியுடன் நாங்கள் இந்த படத்தை உருவாக்கியதால், இப்படத்தின் பிரம்மாண்டமான காட்சிகளை உருவாக்குவது எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. சாம்ராட் பிரிதிவிராஜ் சவுகான் இந்தியாவின் ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார், டெல்லி அவரது அரசியல் தலைநகராகவும் இருந்தது. எனவே அவரது ஆட்சிக்கும் வாழ்க்கைக்கும் தொடர்புடைய நகரங்களான டெல்லி, அஜ்மீர், கன்னாவ் ஆகிய நகரங்களை 12ஆம் நூற்றாண்டில் இருந்ததுபோல நாங்கள் உருவாக்கினோம்.

இதனால் அக்காலத்தில் அந்த நகரங்கள் எப்படி அற்புதமாக இருந்தனவோ அப்படியே அசலாகக் படத்தில் காணலாம். யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத பிரம்மாண்டத்தை வடிவமைத்த செட் வடிவமைப்பாளர் குழுவினருக்கு நான் வாழ்த்துக்களை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
இந்த நகரை உருவாக்க உண்மையான பளிங்கு கற்கள் (மார்பில்) பயன்படுத்தப்பட்டது. மேலும், நம் கண்களுக்கு விருந்தாக இருக்கும் இந்த பிரம்மாண்ட செட்டினை வடிவமைக்க 900 தொழிலாளர்கள் எட்டு மாதங்கள் கடுமையாக உழைத்தார்கள். சாம்ராட் பிருத்விராஜ் சவுகானின் அரண்மனை உட்பட நகரின் ஒவ்வொரு பகுதிகளும் அஸ்திவாரத்தில் இருந்து உருவாக்கப்பட்டவை. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.