இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி பல்வேறு பிரச்சனைகளை அடுத்தடுத்து எதிர்கொண்டு வருகிறது.
இதில் முக்கியமா ஸ்டார்ட்அப் முதலீட்டு சந்தை, போதுமான டெலிவரி ஊழியர்கள் இல்லாதது, அதிகப்படியான செலவுகள், போட்டி, வர்த்தகம் சரிவு ஆகியவற்றை எதிர்கொண்டு வருகிறது.
பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!
இந்நிலையில் ஸ்விக்கி தனது வர்த்தகத்தைப் புதிய பிரிவில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்து உள்ளது. இதற்குப் பெயர் Minis எனவும் பெயரிட்டு உள்ளது.
ஸ்விக்கி நிறுவனம்
ஸ்விக்கி நிறுவனம் சமீபத்தில் டெல்லி என்சிஆர், மும்பை, புனே, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தனது சூப்பர்டெய்லி செயல்பாடுகளை மொத்தமாக மே 12ஆம் தேதி முதல் நிறுத்தியது. இது இந்நிறுவனத்திற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புதிய வர்த்தகத் துறைக்குள் நுழைத்துள்ளது.
Minis திட்டம்
ஸ்விக்கி நிறுவனம் உள்ளூர் கடைகளுக்கான ஈகாமர்ஸ் தளத்தை உருவாக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. இதன் மூலம் ஸ்விக்கி உணவு, மளிகை பொருட்கள் டெலிவரி சேவையைத் தாண்டி ஈகாமர்ஸ் துறைக்குள் நுழைய உள்ளது.
ஈகாமர்ஸ்
ஸ்விக்கி உருவாக்கியுள்ள இப்புதிய Minis எனப் பெயரிடப்பட்டு உள்ள ஈகாமர்ஸ் தளத்தில் உள்ளூர் கடைகள் அதாவது மளிகை கடைகள், பேன்சி ஸ்டோர்கள் போன்ற அனைத்து ரீடைல் கடைகளும், தயாரிப்புகளை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யும் D2C நிறுவனங்கள், தனிநபர் தொழிலதிபர்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோரை ஓரே குடைக்குள் இணைத்து கோடிக்கணக்கான ஸ்விக்கி வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யும் ஈகாமர்ஸ் வர்த்தகத்தை உருவாக்க உள்ளது.
சோதனை துவங்கியது
மேலும் தற்போது கிடைத்துள்ள தரவுகள் அடிப்படையில் ஸ்விக்கி இந்த மினிஸ் திட்டத்தை ஏற்கனவே சில நகரங்களில் சில வாடிக்கையாளர்களிடம் சோதனை செய்து வருவதாகத் தெரிகிறது. இதோடு இத்திட்டம் தனியாக இயங்காது ஸ்விக்கி தளத்தில் இருக்கும் இன்ஸ்டாமார்ட் போலவே இந்த மினிஸ் சேவையும் இணைக்கப்படும்.
போட்டி
ஈகாமர்ஸ் துறையில் அமேசான், பிளிப்கார்ட் உடன் ஏற்கனவே டாடா, ரிலையன்ஸ் போன்றவை போராடி வரும் நிலையில் தற்போது ஸ்விக்கி களத்தில் இறங்கியுள்ளது. இதனால் இந்திய டிஜிட்டல் சந்தையில் நாளுக்கு நாள் போட்டி அதிகரிப்பது மட்டும் அல்லாமல் ரீடைல் சந்தை மொத்தமும் பெரிய நிறுவனங்கள் கைக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
Swiggy entering into e-commerce; Minis — a new marketplace for local stores
Swiggy entering into e-commerce; Minis — a new marketplace for local stores ஈகாமர்ஸ் துறைக்குள் நுழையும் ஸ்விக்கி.. ஷாக்கான சோமேட்டோ..!