Starlink Satellite: ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், அவற்றை முடக்கவோ அல்லது அழிக்கவோ தயாராக இருப்பதாக சீன ராணுவ ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், ஒவ்வொரு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளையும் கண்காணிப்பதற்கு அளவு மற்றும் உணர்திறன் கொண்ட கண்காணிப்பு அமைப்பு உள்பட, செயற்கைக்கோள் எதிர்ப்பு திறன்களை சீனா உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Twitter Deal: வெடிக்கும் சர்ச்சை! ஆதாரத்தை கோரும் எலான் மஸ்க்!
எலான் மஸ்கை உரசும் சீனா
பிஎல்ஏ படையின் கீழ் இயங்கும் பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிராக்கிங் & டெலிகம்யூனிகேஷன்ஸ் ஆராய்ச்சியாளரான ரென் யுவான்ஜென் இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கினார். இதில் பல மூத்த ஆய்வாளர்களும் உள்ளடக்கியிருந்தனர்.
“மென்மையான மற்றும் கடினமான அழிக்கும் முறைகளை கொண்டு, சில ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை இழக்கச் செய்ய முடியும்” என்று சீனாவில் மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழான மாடர்ன் டிஃபென்ஸ் டெக்னாலஜியில் வெளியிடப்பட்ட கட்டுரை குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங் சேவை
ஸ்டார்லிங்க் என்பது மிகவும் லட்சியகரமான செயற்கைக்கோள் தகவல் தொடர்பு திட்டமாகும். உலகெங்கிலும் உள்ள வணிக மற்றும் ராணுவ பயனர்களுக்கு இணைய சேவைகள் வழங்க இது அகன்ற அலைவரிசையை வழங்குகிறது.
பல புதுமையான கண்டுபிடிப்புகளுக்காக
ஸ்பேஸ் எக்ஸ்
நிறுவனர்
எலான் மஸ்க்
சீனாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வந்தார். ஆனால், அவரது நிறுவனத்தின் இரண்டு ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் சீனாவின் விண்வெளி ஆய்வு மையத்தை நெருங்கியது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது.
அமெரிக்க ராணுவ ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள், ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்தி, அவற்றின் தரவு பரிமாற்ற வேகத்தை 100 மடங்குக்கும் மேலாக அதிகரிக்க முடியும் என்றும் சீன ஆய்வாளர் கணித்துள்ளார்.
Elon Musk: ட்விட்டரை ஒப்படைக்கிறோன்; ஆனால் அதற்கு நான் இறக்க வேண்டும்!
ராணுவ சேவைகளை துரிதமாக்கும் ஸ்டார்லிங்
ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் இயங்குதளத்தின் அடிப்படையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதில், ஒலியின் ஐந்து மடங்கு வேகத்தில் அல்லது பூமியின் வளிமண்டலத்தில் அதிக வேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களைக் கண்டறிந்து கண்காணிக்கும் உணர்திறன் கருவிகளும் அடங்கும்.
சுமார் 2,300க்கும் அதிகமான செயற்கைக்கோள்களுடன், தாழ்வான புவி வட்டப் பாதையில் நிலை கொண்டிருக்கும் ஸ்டார்லிங்க் சேவை பொதுவாக அழியாதது என்று நம்பப்படுகிறது. ஏனெனில், சில செயற்கைக்கோள்கள் செயல் இழந்தாலும், மீதமிருக்கும் சேட்டிலைட்டுகள் சேவையை தொடர்ந்து வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
சீனா – அமெரிக்க இடையேயான உரசல்
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வளர்ந்து வரும் பதற்றம் தான் இந்த எச்சரிக்கைக்கு காரணமாகப் பார்க்கப்பட்டாலும், மிகமுக்கியமாக சீனா தனது சொந்த செயற்கைக்கோள்களை பிராட்பேண்ட் தேவைகளுக்காக நிறுவ உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
உலக அளவில் இணைய அணுகலை வழங்க, Xing Wang – ஸ்டார்நெட் (StarNet) எனப்படும் இதேபோன்ற திட்டத்தை சீனா தொடங்கியுள்ளது. ஸ்டார்நெட் அமைப்பில் இதுவரை சில நூறு செயற்கைக்கோள்கள் மட்டுமே இருக்கும். எனினும், பிற செயற்கைக்கோள்களுடன் இணைந்து வலுவான கட்டமைப்பை உருவாக்க சீனா முனைப்புக் காட்டி வருகிறது.