தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவுக்கு நந்தா பிதாமகன் என்ற இரு மெகாஹிட் படத்தை கொடுத்து அவரின் திரை வாழ்க்கையை உச்சத்தில் கொண்டுசென்ற பெருமை இயக்குநர் பாலாவையே சாரும்.
தற்போது சமூக கருத்துக்களை மையமாக வைத்த கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் சூர்யா, எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து 3-வது முறையாக இயக்குநர் பாலாவுடன் இணைந்து தனது 41-வது படத்தில் நடித்து வந்தார் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது 2டி நிறுவனம் மூலம் இந்த படத்தை சூர்யாவே தயாரித்து வந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில். படப்பிடிப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் பாலாவுக்கும் நடிகர் சூர்யாவுக்கும் கருத்து வெறுபாடு ஏற்பட்டு படம் பாதியில் நிறுத்தப்பட்டதாக வதந்திகள் பரவியது. ஆனாலும் சூர்யா தரப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புர் எதுவும் வெளியாகவில்லை.
இந்த தகவல் உண்மை இல்லை என்றாலும், சூர்யா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சூர்யா இயக்குநர் பாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடித்து கன்னியகுமாரியில் இருந்து திரும்பிய நடிகர், சூர்யா படத்தின் தனது தோற்றத்தை வெளிப்படுத்தும்விதமாக இந்த படத்தை வெளியிட்டுள்ளார்.
Waiting to be back on sets…!! #Suriya41 pic.twitter.com/enuJ5MNbZJ
— Suriya Sivakumar (@Suriya_offl) May 26, 2022
இந்த படத்தில் சூரியா ஒரு முரட்டுத்தனமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீரித்தி ஷெட்டி, மமிதா பைஜு ஆகியோர் நடித்து வருகின்றனர், மேலும் ஜோதிகா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தனது அடுத்த படத்திற்கும் இயக்குனர் சிவாவுடன் இணைய உள்ளார் என்றும் அது ஜூலை மாதத்தில் இதற்காக அறிவிப்பு வெளியாகும் என்றும் சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதோடு மட்டுமல்லாமல் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபஹாத் பாசில் ஆகியோரைக் கொண்ட லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்திலும் சூர்யா ஒரு கெஸ்ட்ரோலில் நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 3 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”