16 பில்லியன் டாலர் முதலீடு.. அசத்தும் ஜெகன் மோகன் ரெட்டி..!

சுவிஸ் நாட்டின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் எவ்விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சரியான திட்டமிடல் உடன் ஆந்திர பிரதேச மாநிலம் மிகப்பெரிய முதலீட்ட அசால்ட்டாகக் கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!

ஆந்திர பிரதேச மாநிலத்தின் செயல்பாடுகள் தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலம்

ஆந்திர பிரதேச மாநிலம்

டாவோஸ்-ல் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் ஆந்திர பிரதேச மாநிலம் கிரீன் எனர்ஜி துறையில் மட்டும் சுமார் 16 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டை ஈர்த்து அசத்தியுள்ளது.

 நெட் ஜீரோ இலக்கு

நெட் ஜீரோ இலக்கு

இந்தியாவில் தொழில்துறை, உற்பத்தி துறை வளர்ச்சி அடையும் அளவிற்கு மின்சார உற்பத்தி மேம்படவில்லை, இதேபோல் இந்தியாவுக்கு நெட் ஜீரோ இலக்கு இருக்கும் நிலையில் நிலக்கரியை தொடர்ந்து நம்பிக்கொண்டு இயங்க முடியாத, இந்த நிலையில் தான் மத்திய அரசு முதல் மாநில அரசு வரையில் கிரீன் எனர்ஜி துறைக்கு அதிகப்படியான முக்கியதுவம் அளித்து வருகிறது.

 16 பில்லியன் டாலர் முதலீடு
 

16 பில்லியன் டாலர் முதலீடு

இதன் அடிப்படைியில் சிறப்பான திட்டத்தைத் தீட்டி டாவோஸ் உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் களமிறங்கிய ஆந்திர அரசு அதானி கிரீன் எனர்ஜி, GIC முதலீட்டில் இயக்கும் Greenko, அரபிந்தோ ரியாலிட்டி & இன்பாரஸ்டக்சர் நிறுவனத்திடம் இருந்து சுமார் 16 பில்லியன் டாலர் முதலீட்டை திரட்டி அசத்தியுள்ளது. இந்த முதலீட்டின் வாயிலாக ஆந்திர மாநிலத்தில் சுமார் 38,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

 அதானி கிரீன் எனர்ஜி

அதானி கிரீன் எனர்ஜி

அதானி கிரீன் எனர்ஜி 7.74 பில்லியன் டாலர் முதலீட்டில் 10000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் திட்டத்தையும், 3700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஹைட்ரோ சோலார் திட்டத்தையும் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஹைட்ரோ, சோலார் மற்றும் காற்றாலை

ஹைட்ரோ, சோலார் மற்றும் காற்றாலை

மேலும் 8.26 பில்லியன் டாலர் முதலீட்டை GIC முதலீட்டில் இயக்கும் Greenko, அரபிந்தோ ரியாலிட்டி & இன்பாரஸ்டக்சர் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இவ்விரு நிறுவனங்களும் ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஹைட்ரோ, சோலார் மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பில் முதலீடு செய்ய உள்ளது.

33,000 மெகாவாட் பசுமை மின்சாரம்

33,000 மெகாவாட் பசுமை மின்சாரம்

டாவோஸ் மாநாட்டில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன் மாநிலத்தில் 33,000 மெகாவாட் பசுமை மின்சாரத்தைத் தயாரிக்கும் திறனும் தளமும் உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் ஆந்திராவில் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான மின்சாரம் மூலம் தொழிற்துறை மற்றும் உற்பத்தி துறையை வேகமாக விரிவாக்கம் செய்ய முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Andhra pradesh Govt got $16 billion renewables energy investment in davos

Andhra pradesh Govt got $16 billion renewables energy investment in davos 16 பில்லியன் டாலர் முதலீடு.. அசத்தும் ஜெகன் மோகன் ரெட்டி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.