இந்த வேலைக்கு ஐடி வேலை தேவலாம்..!! பாதுகாப்பா இருக்கலாம்..!

இந்திய வேலைவாய்ப்புச் சந்தை தற்போது முக்கியமான மாற்றங்களை எதிர்நோக்கி வருகிறது.

குறிப்பாக இந்திய பொருளாதாரத்தின் முக்கியத் தூண் ஆக இருக்கும் ஐடி மற்றும் டெக் சேவை துறையில் வேலைவாய்ப்பு நிரந்தரம் குறித்த பிரச்சனை தற்போது மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது.

பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!

ஒருபக்கம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றி வரும் நிலையில் மறுபுறம் ஐடி சேவை நிறுவனங்களில் போதுமான ஊழியர்கள் இல்லாமல் அதிகளவிலான பிரஷ்ஷர்களை நியமித்து வருகின்றனர்.

டெக் துறை

டெக் துறை

இந்திய பொருளாதாரத்தை வேகமாகக் கட்டியெழுப்பும் டெக் துறையில் இரு முக்கியப் பிரிவுகள் உண்டு ஒன்று சேவைகளை நேரடியாக அளிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மற்றொன்று பிற நிறுவனங்களுக்கு டெக் சேவைகளை அளிக்கும் ஐடி சேவை நிறுவனங்கள். கடந்த 2 வருடமாக இரு பிரிவுகளும் அதிகளவிலான வர்த்தகம், முதலீடு, வேலைவாய்ப்பு எனக் கொடிகட்டிப் பறந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அடுத்தடுத்து ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், ஐடி நிறுவனங்கள் புதிய ப்ராஜெக்ட்கள் கிடைக்காத காரணத்தால் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. ஆனால் பணிநீக்கம் செய்யும் அளவில் எந்த ஐடி சேவை நிறுவனமும் இல்லை.

 ஐடி சேவை நிறுவனங்கள்
 

ஐடி சேவை நிறுவனங்கள்

இதேவேளையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய முதலீடுகள் கிடைக்காமல் மிகவும் மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், ஐடி சேவை நிறுவனங்களின் வருவாய் மற்றும் வர்த்தகம் கணிசமான அளவிற்குப் பாதித்துள்ளது. இதற்கு உலகளாவிய பணவீக்கம் மற்றும் விலை உயர்வு தான் முக்கியக் காரணம் எனவும் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

இதனால் ஐடி சேவை துறை நிறுவன ஊழியர்கள் இந்த வருடம் குறைவான சம்பள உயர்வை மட்டுமே பெறுவார்கள். இதற்கு முக்கியக் காரணம் ஐடி ஊழியர்களுக்கான டிமாண்ட் 400% அதிகரித்துள்ளதும், புதிதாகச் சேரும் ஊழியர்களுக்கு 70-120 சதவீதம் வரையில் சம்பள உயர்வு அளிக்கப்படும் காரணத்தால் ஐடி சேவை நிறுவனங்களின் மார்ஜின் பெரிய அளவில் குறைந்துள்ளது.

ரெசிஷன்

ரெசிஷன்

இதேவேளையில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா நாடுகளில் ரெசிஷன் வரும் எனக் கணிக்கப்படும் காரணத்தால் ஐடி சேவை நிறுவன பங்குகள் தற்போது அதிகளவிலான சரிவை எதிர்நோக்கி உள்ளது.

பணிநீக்கம்

பணிநீக்கம்

ஆனால் ஐடி சேவை துறையில் அடுத்த 5 முதல் 10 வருடத்திற்குப் பணிநீக்கம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருக்கும் நிலையில் தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 70 -120 சதவீத சம்பள உயர்வுடன் ஐடி சேவை துறையில் பணியில் சேர தயாராகியுள்ளனர்.

ஸ்டார்ட்அப் ஊழியர்கள்

ஸ்டார்ட்அப் ஊழியர்கள்

இதேபோல் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிகளவிலான பணிநீக்கம் இருக்கும் காரணத்தால் ஸ்டார்ட்அப் ஊழியர்களுக்கும் வேறு வழி இல்லை. இதை ஐடி நிறுவனங்களும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இயங்கி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இப்போ சொல்லுங்க இன்றைய வர்த்தகச் சூழ்நிலையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஐடி சேவை நிறுவன வேலை பாதுகாப்பானது தானே..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IT jobs are safer than startup jobs in market tornado

IT jobs are safer than startup jobs in market tornado இந்த வேலைக்கு ஐடி வேலை தேவலாம்..!! பாதுகாப்பா இருக்கலாம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.