VMware நிறுவனத்தை மிகப்பெரிய தொகைக்குக் கைப்பற்றும் பிராட்காம்..! ஹாக் இ. டான் அசத்தல்..!

உலகம் முழுவதும் செமிகண்டக்டர் சிப் தட்டுப்பாட்டில் தவித்து வரும் நிலையில் இத்துறையில் முன்னணி நிறுவனமான பிராட்காம் அதிகப்படியான லாபத்தைப் பெற்று வரும் நிலையில், தனது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!

உலகளவில் வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் கிளவுட் வர்த்தகப் பிரிவைக் குறிவைத்து இத்துறையின் முன்னோடியாக விளங்கும் VMware நிறுவனத்தைக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

கொரோனா தொற்றுக்குப் பின்பு அதிகளவில் நிறுவனங்கள் கைப்பற்றப்படும் எனக் கணிக்கப்பட்டது, ஆனால் பெரிய நிறுவனங்கள் மாற்றொரு பெரிய நிறுவனத்தைக் கைப்பற்றும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

உலகளவில் கொரோனா கொற்றுக்குப் பின்பு பெரிய நிறுவன கைப்பற்றலைத் துவக்கி வைத்தது சத்ய நாடெல்லா தலைமை வகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தான்.

கேமிங் நிறுவனம்

கேமிங் நிறுவனம்

மைக்ரோசாப்ட் கேமிங் துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய 68.7 பில்லியன் டாலர் முதலீட்டில் Activision Blizzard நிறுவனத்தைக் கைப்பற்றியது. இதுதான் 2022ஆம் ஆண்டின் காஸ்ட்லியான வர்த்தக டீல் ஆக இருந்தது

VMware நிறுவனம்
 

VMware நிறுவனம்

இதைத் தொடர்ந்து பிராட்காம் நிறுவனம் தற்போது சுமார் 61 பில்லியன் டாலர் முதலீட்டில் VMware நிறுவனத்தைக் கைப்பற்றி 2022ஆம் ஆண்டின் காஸ்ட்லியான டீல் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. மலேசிய சீனரான ஹாக் இ. டான் தலைமையில் பிராட்காம் மிகப்பெரிய வளர்ச்சி படியை எடுத்து வைத்துள்ளது.

பங்குகள் கைமாற்றம்

பங்குகள் கைமாற்றம்

இந்தக் கைப்பற்றில் ஒப்பந்தம் மூலம் VMware நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு 142.50 டாலர் பணம் அல்லது 0.2520 பிராட்காம் பங்குகள் அளிக்கப்பட உள்ளது. மேலும் பிராட்காம் VMware நிறுவனத்தின் 8 பில்லியன் டாலர் கடனையும் சேர்ந்து கைப்பற்றுகிறது.

மென்பொருள் சேவை

மென்பொருள் சேவை

VMware நிறுவன கைப்பற்றலுக்குப் பின்பு பிராட்காம் சாப்ட்வேர் குரூப் VMware உடன் இணைக்கப்பட உள்ளது. பிராட்காம் நிறுவனம் 2018ல் CA Technologies நிறுவனத்தை 18.9 பில்லியன் டாலருக்கும், 2019ல் Symantec’s security பிரிவை 10.7 பில்லியன் டாலருக்கும் கைப்பற்றியது.

செமிகண்டக்டர் சிப்

செமிகண்டக்டர் சிப்

இந்தக் கைப்பற்றலுக்குப் பின்பு பிராட்காம் செமிகண்டக்டர் சிப் சேவைகளுக்கு இணையாக மென்பொருள் சேவையிலும் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது. தற்போது VMware நிறுவன கைப்பற்றல் பிராட்காம்-ன் மென்பொருள் சேவையில் புதிய மைல்கல் ஆக இருக்கும்.

ஹாக் இ. டான்

ஹாக் இ. டான்

பிராட்காம் நிறுவனம் 2018ல் குவால்காம் நிறுவனத்தை 100 பில்லியன் டாலருக்கு கைப்பற்ற முயற்சி செய்து தோல்வி அடைந்தது. மலேசிய சீனரான ஹாக் இ. டான் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை உருவாக்கியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Broadcom-VMware $61 billion deal: Important things to know

Broadcom-VMware $61 billion deal: Important things to know

Story first published: Thursday, May 26, 2022, 22:14 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.