அமெரிக்காவில் ஹிட்லரின் நவ-நாஜிக் கொள்கையை பிரசாரம் செய்ததற்காக ஜார்ல் ஜட்சன் ராக்ஹில்(35) கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து பயங்கரமான இயந்திர துப்பாக்கிகள் கிடைத்து இருப்பதாக பொலிஸார் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 24ம் திகதி ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரின் சமூக மையத்தின் முன்பு ஜார்ல் ஜட்சன் ராக்ஹில்(35) என்ற நபர் ஹிட்லரின் நவ-நாஜிக் கொள்கையை பிரசாரம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவும் சமூக நீதி மையத்தின் அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, கிளாக்காமாஸ் கவுண்டியில் உள்ள போக்குவரத்து நிறுத்தம் முன்பு ஜார்ல் ஜட்சன் ராக்ஹிசை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில், ஜார்ல் ஜட்சன் ராக்ஹில்-சின் வீடு மற்றும் வாகனம் ஆகியவற்றில் பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் அவரது வீட்டில் இருந்து பயங்கரமான இயந்திர துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, ஜார்ல் ஜட்சன் ராக்ஹில் மீது பொலிஸார் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தர என அனைத்து பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பாதுகாப்போம்: சீனாவிற்கு எஹிராக ஜப்பான், வியட்நாம் கூட்டறிக்கை!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளியில் நடந்த கொடூரமான துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து இந்த தகவல் வெளிவந்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.