இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பாதுகாப்போம்: சீனாவிற்கு எஹிராக ஜப்பான், வியட்நாம் கூட்டறிக்கை!


இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இணைந்து கையாள ஜப்பான் மற்றும் வியட்நாம் நாடுகள்  தயாராக இருப்பதாக வியாழன்கிழமை உறுதியளித்துள்ளனர்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீன அரசாங்கத்தின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்த பிராந்தியங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்துவது தொடர்பாக ஜப்பான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் வியாழன்கிழமை டோக்கியோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த கூட்டத்தின் முடிவில், ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி மற்றும் வியட்நாம் துணைப் பிரதமர் பாம் பின் மின் ஆகியோர், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் சுகந்திரத்தை மதிக்கும் தன்மை, இறையாண்மை, பிராந்திய நிலைப்பாடு, ஆகியவற்றை பாதுகாக்க இருநாடுகளும் இணைந்து செயல்படும் என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பாதுகாப்போம்: சீனாவிற்கு எஹிராக ஜப்பான், வியட்நாம் கூட்டறிக்கை!

இந்த பேச்சுவார்த்தையானது, குவாட் உச்சிமாநாட்டில் சீனாவிற்கு எதிரான மோதல் போக்கை அதிகப்படுத்துவது தொடர்பான ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கூட்டத்தில் பேசிய ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, கிழக்கு மற்றும் தென் சீன கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஒருதலைப்பட்சமான முயற்சிகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பாதுகாப்போம்: சீனாவிற்கு எஹிராக ஜப்பான், வியட்நாம் கூட்டறிக்கை!

அத்துடன் சுகந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதிப்படுத்துவதில் இருநாடுகளும் முழு கூட்டு ஓத்துழைப்பையும் தரும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் தேங்கி நிற்கும் 20 மில்லியன் டன் உணவு தானியம்: போர் நாடுகளுடன் துருக்கி பேச்சுவார்த்தை!

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பாதுகாப்போம்: சீனாவிற்கு எஹிராக ஜப்பான், வியட்நாம் கூட்டறிக்கை!

ஜப்பானும் அமெரிக்காவும் சீனாவின் பொருளாதார மற்றும் ராணுவ நடவடிக்கையை எதிர்க்கும் பார்வையை ஊக்குவித்து வருகிறது.

அதே சமயம், வியட்நாம் சமநிலையான இராஜதந்திரத்தை மனநிலையே தொடர்ந்து வருகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.