தங்க நகைக்கு ஜூன் 1 முதல் ஹால்மார்க் கட்டாயம்.. நகை வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்ன?

இந்திய அரசின் கட்டாய ஹால்மார்க் இரண்டாம் கட்ட அறிவிப்பானது ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளது. இது இரண்டாம் கட்டமாக 32 மாவட்டங்களில் கட்டாயமாக்கப்படவுள்ளது.

இதற்கிடையில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட அறிவிப்பின் மத்தியில், நகை பிரியர்கள் இனி நகை வாங்கும்போது, கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? மற்ற முக்கிய விஷயங்கள் என்ன? இதனால் என்ன பயன்?

இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் முக்கிய உலோகங்களில் ஒன்றாக தங்கம் பார்க்கப்படுகிறது. ஆக அப்படி இருக்கும்பட்சத்தில் தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?வாருங்கள் பார்க்கலாம்.

தங்க காயினில் முதலீடு செய்யலாமா.. பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஏற்றது எது?

எதையும் கவனிப்பதில்லை

எதையும் கவனிப்பதில்லை

சிறியதாக வீட்டிற்கு தேவையான உணவு பொருட்கள், பர்சனல் கேர் வாங்கும்போது கூட, அதன் தரம் என்ன என்று பார்த்து தான் வாங்குகிறோம். ஆனால் விருப்பமான பல ஆயிரங்கள் செலவழித்து வாங்கும் தங்க நகை வாங்கும்போது அப்படி பார்க்கிறோமா? என்றால் நிச்சயம் பலரும் பார்ப்பதில்லை. அந்த தங்கத்தின் தூய்மை எப்படியுள்ளது. தரம் எப்படியுள்ளது. அது எத்தனை கேரட் நகை என எதனையும் பார்ப்பதில்லை.

எதற்காக?

எதற்காக?

தங்க ஹால்மார்க் திட்டத்தினை செயல்படுத்த இந்திய அரசாங்கம், இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (BIS) என்ற அமைப்பினை நியமித்துள்ளது. இதன் மூலம் நகை உற்பத்தியாளர்களுக்கு BIS ஆல் சான்றளிக்கப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்து கொண்டவர்கள் தங்களது நகையினில் எந்தவொரு ஹால்மார்க் மையத்திலும் முத்திரயை பெறலாம்.

நகைகள் தூய்மையாக இருக்கும்
 

நகைகள் தூய்மையாக இருக்கும்

இவ்வாறு BIS ஹால்மார்க் பொறிக்கப்பட்ட நகைகள் தூய்மை மற்றும் அதில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற உலோகங்களின் கலவை என அனைத்தையும் உறுதி செய்து கொள்ளலாம். ஆக நகை வாங்குபவர்கள் தாங்கள் வாங்கும் நகையானது 22 கேரட்டினால் ஆனது என்பதை இதன் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும்.

BIS முத்திரை எப்படியிருக்கும்?

BIS முத்திரை எப்படியிருக்கும்?

ஆக நீங்கள் நகை வாங்கும்போது 22k 916 என்ற முத்திரை உள்ளதா? என்பதையும் கவனித்து வாங்குவது நல்லது. அதில் குறிப்பாக முக்கோண சிம்பல் இருக்கிறதா, நகை டெஸ்ட் செய்யப்பட்ட லேப், வருடம் என்ன, கடை என்ன என்பதையும் பார்க்க வேண்டும். நகைகளில் BIS என்ற குறியீடானது முக்கோண வடிவில் இருக்க வேண்டும்.

பொதுவான காரணிகள்?

பொதுவான காரணிகள்?

தங்க நகை விலை சந்தை விலையில் உள்ளதா? நகையின் எடை சரியாக உள்ளதா? நகைகளில் கற்கள் பதிக்கப்பட்டிருந்தால் அவற்றின் எடை கழிக்கப்பட்டு, தங்கத்தின் விலை தனியாகவும் கற்களின் விலை தனியாகவும் போடப்பட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். விற்பனை செய்யும் நிறுவனத்தின் பெயர் நகையில் பொறிக்கப்பட்டுள்ளதா? நகையின் தங்கத்தின் தரச் சான்றதழ் உள்ளதா? செய்கூலி சேதாரம் ஏற்கும் அளவில் உள்ளதா? கடைசியாக நகை வாங்கிய பின்னர் நீங்கள் வாங்கும் பில் சரியாக உள்ளதா? என்பதையும் சரி பார்த்து வாங்குகள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gold hallmarking mandatory from June 1:What are the things to look for before buying gold jewelry?

The hallmark has been mandatory for gold jewelry since June 1st. What are the things to look for when buying jewelry in this condition?

Story first published: Thursday, May 26, 2022, 13:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.