சென்னை: பாரதியின் ‘புதுமைப் பெண்’ எனும் தத்துவத்தில் உத்வேகம் பெற்ற பாரம்பரியம் மிக்க டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’யோடு இணைந்து தமிழ் கலாச்சாரத்தை ஒளிரச் செய்யும் புதுமைப் பெண்களைக் கொண்டாட விரும்பி, இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.
‘புதுமைப் பெண்’ தமிழ்க் கலாச்சாரத்தின் பாதுகாவலராகவும், புதுமையின் முன்னோடியாகவும் இருப்பதோடு, தங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். ‘புதுமைப் பெண் யார்’ என்பது குறித்து சில பிரபலங்களிடம் கேட்டோம். அவர்கள் கூறியவை:
மதுமிதா, திரைப்பட இயக்குநர்: தன் குடும்பத்தினருக்காக வேலை செய்வதைத் தாண்டி, தனக்காகவும் வாழ்வது தவறல்ல; எந்தச் சூழ்நிலையிலும் தன் கனவுகளையும் லட்சியத்தையும் வாழ்க்கையையும் விட்டுத்தராமல் இருப்பது சுயநலம் அல்ல என்று நினைக்கிற ஒவ்வொரு பெண்ணும் புதுமைப் பெண்ணே.
டாக்டர் அமுதா ஹரி, மகப்பேறு மருத்துவர், சென்னை: சுய மரியாதையும் உயரிய கொள்கையும் கொண்டவர்களே புதுமைப் பெண்கள். ஆண்கள் செய்கிற அனைத்தையும் பெண்களும் செய்வோம் என்பதல்ல புதுமைப் பெண்ணுக்கான அடையாளம். உடல், மனம், உணர்வு ஆகிய மூன்றும் உறுதியாக இருப்பவர்களே புதுமைப் பெண்கள். தான் நினைப்பதை எவ்விதத் தயக்கமும் இன்றி துணிச்சலுடன் பேசுகிறவர்களே புதுமைப் பெண்கள்.
தமிழ், எச்.ஐ.வி.யோடு வாழ்கிறவர்களுக்கான கூட்டமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவர்: கல்வியும் ஆணுக்கு நிகரான வேலைவாய்ப்பும் கிடைக்கப் பெற்றவர்கள் மட்டுமே புதுமைப் பெண்கள் அல்ல. தன் உடல் நலம் குறித்த அக்கறையும் பரிசோதனைகள் பற்றிய தெளிவும் இருக்கிறவர்களே புதுமைப் பெண்கள். பொதுவாக ஆணுக்குக் கிடைக்கிற மருத்துவ கவனிப்பும், சத்தான உணவும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. ‘என் சிகிச்சை என் உரிமை’ என்று முழங்குகிற அனைவரும் புதுமைப் பெண்கள்தான்.
அங்கயற்கண்ணி, தமிழகத்தின் முதல்பெண் ஓதுவார்: எந்த விஷயமாக இருந்தாலும் தன்னிச்சையாக முடிவெடுக்கத் துணிகிறவர்களே புதுமைப் பெண்கள். வீட்டிலும் வெளியிலும் எதற்காகவும் யாரையும் சார்ந்து இருக்காதவர்களும் புதுமைப் பெண்களே. யாரையும் சாராமல், வீடு, அலுவலகம் என எங்கேயும் ஆண்கள் பேசட்டும் என்று அமைதியாக இருக்காமல், துணிந்து தன் கருத்தைச் சொல்கிறவர்கள் புதுமைப் பெண்கள்.
மதுமிதா, எழுத்தாளர்: ஆணாதிக்கத்தை மறுத்து, அனைத்துத் துறைகளிலும் சமத்துவத்தைக் கோருகிறவர்கள் புதுமைப் பெண்கள். பெண்களுக்கான உரிமை என்ன, விருப்பம் என்ன என்பதைப் பெண்களுக்கு உணர்த்துகிறவர்கள் புதுமைப் பெண்கள். குடும்பமும் சமூகமும் விதித்த கண்ணுக்குப் புலப்படாத சில விதிகளை மீறி உடல், மன, பொருளாதார நலத்தைப் பேணுகிறவர்கள் புதுமைப் பெண்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
‘இந்து தமிழ் திசை’ உடன் இணைந்து மேற்கொள்ளும் இந்த முன்னெடுப்பின் மூலம் புதுமைப் பெண்களைக் கொண்டாடுவதோடு, அவர்களைத் தங்கள் ஷோரூமுக்கு அழைத்து கவுரவிக்கவும் திட்டமிட்டுள்ளது தனிஷ்க். புதுமைப் பெண்கள் பகிர்ந்துகொள்ளும் அனுபவங்கள் தனிஷ்க் ‘புதுமைப் பெண்’ ஃபேஸ்புக் பக்கத்திலும் இடம் பெறும்.
புதுமைப் பெண்கள் தங்களது அனுபவங்களை tanishq.co.in/pudhumai-penn என்ற லிங்க்-கில் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது அருகாமையில் உள்ள தனிஷ்க் ஷோரூ முக்கு நேரில் வந்தும் பகிர்ந்து கொள்ளலாம்.
இத்துடன் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தும், உங்களது அனுபவக் கதைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.