பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் பாஜகவினர் என பலரும உற்சாக வரவேற்கு அளித்தனர். தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பங்கேற்ற பிரதமர் ரூ.31,400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி வணக்கம் என்ற தமிழ் வார்த்தையுடன் தனது பேச்சை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில்.
தமிழ் மொழி, தமிழக மக்கள் அவர்களின் தமிழ் கலாச்சாரம் அத்தனையும் சிறப்பு வாய்ந்தது அனைத்து துறைகளிலும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சிறந்து விளங்குகிறார். தமிழகத்திற்கு வருவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. பொங்கல் புத்தாண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தவை. செவித்திறன் குறைவுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற 16 பேரில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
கேன்ஸ் பட விழாவில் எல்.முருகன் தமிழர்களின் பாரம்பரிய உடையில் பங்கேற்று சிவப்பு கம்பள வரவேற்பு பெற்றார். தமிழ் மொழியை வளர்க்க மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. பனாரஸ் இந்து பல்கலையில், பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன. தற்போது தொடங்கப்பட்டுள்ள ரெயில்வே திட்டங்கள் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையதள சேவை கிடைக்கும்படி செயல்படுத்தகிறோம். இரு மொழிகளை ஊக்குவிப்பதற்கே தேசிய கல்வி கொள்ளை உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் உள்ள நிலை தமிழக மக்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கும். ஆனால் இந்திய இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பு ஆகியவற்றுக்கு ஆதரவாக இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். இலங்கைக்கு நிதியுதவி செய்வது தொடர்பாக சர்வதேச அரங்கில் பேசி வருகிறோம்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இப்போது இலங்கைக்கு உதவி செய்கிறார்கள்.இலங்கை தமிழர்களுக்கு சுகாதாரம், வீட்டுவசதி உள்ளிட்டவற்றை இந்தியா ஏற்படுத்தி கொடுத்துள்ளது. யாழ்பானம் சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான்.இலங்கை வாழ் தமிழர்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்ரிக்கா வரை தமிழ் கலாச்சாரம் உள்ளது. ஒவ்வொரு துறையினிலும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிறப்பு வாய்ந்தவர்களாக உள்ளனர். அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.
இதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி வேகமெடுக்கும். சாலை வளர்ச்சி திட்டங்கள் பொருளாதார வளர்ச்சியோடு நேரடி தொடர்பு உடையவை. சென்னை – பெங்களூரு விரைவு சாலை திட்டம் இரு முக்கிய நகரங்களை இணைக்கிறது. மதுரை – தேனி ரயில் சேவை திட்டம் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“