இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில் சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.
இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இலங்கையை அடுத்து பாகிஸ்தானிலும் பெட்ரோல் விலை பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மறுபடியும் ஏறப்போகிறதா பெட்ரோல் விலை? விலை இறங்கிடுச்சுன்னு சந்தோஷப்பட வேண்டாம்!
கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் பெட்ரோல் விலை
குறிப்பாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதாகவும், இலங்கையில் தற்போது பெட்ரோல் விலை 420 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லிட்டருக்கு ரூ.30 உயர்வு
இந்தியாவில் கிட்டத்தட்ட நூறு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விற்பனையாகி வரும் நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நிதி அமைச்சர்
இதுகுறித்து பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் அவர்கள் கூறியபோது, ‘ பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், இதனால் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரு.179.86 என விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
டீசல் விலை
அதேபோல் இன்று நள்ளிரவு முதல் டீசலின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் இன்று பாகிஸ்தானில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.174.15 என விற்பனையாகி வருகிறது. பெட்ரோல், டீசல் மட்டுமின்றி அதிவேக பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் லைட் டீசல் ஆகியவற்றின் விலையும் இன்று முதல் லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் சுமை
பாகிஸ்தான் நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பு பாகிஸ்தான் மக்களின் தலையில் இடியாய் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு கூடுதல் சுமையாகும்.
உறுதியற்ற பொருளாதாரம்
பாகிஸ்தானில் தற்போது பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பொருளாதாரம் தொடர்பாக தைரியமான முடிவு எடுக்காததால் அந்நாட்டில் பொருளாதாரம் உறுதியற்ற தன்மையுடன் இருப்பதாகவும் இதன் காரணமாகவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பாகிஸ்தானில் உயர்ந்து கொண்டே வருவதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
After Srilanka, Pakistan Govt Raises Petrol Price
After Srilanka, Pakistan Govt Raises Petrol Price | இலங்கையை அடுத்து பாகிஸ்தானிலும் பெட்ரோல் விலை கடும் உயர்வு: ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?