பால் இவ்ளோ நேரம் கொதிக்கணும்… கெட்டித் தயிர் ரகசியம் இதுதான்!

Kitchen Hacks in tamil: தினந்தோறும் புதிய புதிய உணவுகளை தயார் செய்யும் நாம் அதன் ருசியை அதிகரிக்கவும், எளிமையான முறையில் தயார் செய்யவும் சில வழிகளை அறிந்து வைத்திருப்போம். அந்த வகையில், இன்று நாம் பார்க்கவுள்ள சில குறிப்புகள் மூலம் நம்முடைய சமையலில் இன்னும் கூடுதலான ருசியை கொண்டு வர முடியும். அப்படியான சில எளிய குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

முருங்கைக் கீரை உதிர

கீரை வகையில் மிகவும் சத்தான ஒன்றாக முருங்கைக் கீரை உள்ளது. இவற்றைக் கொண்டு கூட்டு அல்லது குழம்பு தயார் செய்ய அவற்றை நன்றாக ஆய்ந்து கொள்ள வேண்டும். அப்படி ஆய, முருங்கைக் கீரையை இரவு உறங்க செல்லும் முன், அவற்றை ஒரு முழு நீள நியூஸ் பேப்பரில் மடித்து வைத்து விடவும்.

காலையில் எழுந்து பார்த்தால் காம்புகள் தனியாகவும், இலைகள் தனியாகவும் உதிர்ந்து இருக்கும். அதன் பிறகு அதில் இருக்கும் குப்பைகளை மட்டும் சுத்தம் செய்தால் போதும்.

மயோனைஸ் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?

முதலில் அரை கப் அளவிற்கு சாதாரண சமையல் எண்ணெயை ஒரு மிக்ஸியில் சேர்த்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் அதே அளவவிற்கு முழுமையாக கொழுப்பு நிறைந்துள்ள பால் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் அதனுடன் கால் ஸ்பூன் உப்பு, 10 பூண்டுப் பல், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து 5 நிமிடம் மிக்ஸியை வேகமாக ஓட விடவும்.

கெட்டியான மயோனைஸ் பெற, அவற்றுடன் மீண்டும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து அரை நிமிடம் மிக்ஸியை ஓட விடவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த ஹோம்மேடு மயோனைஸ் தயார்.

கெட்டித் தயிர் தயார் செய்வது எப்படி?

முதலில் பாலை நன்கு கொதிக்க வைக்கவும்.

பின்னர் ஒரு கப் பாலுக்கு, ஒரு ஸ்பூன் அளவு தயிர் சேர்த்து எவர்சில்வர் பாத்திரம் அல்லது மண் அல்லது பீங்கான் பாத்திரத்தில் சேர்க்கவும்.

இவற்றை குறைந்தது 8 மணி நேரம் அளவு அப்படியே வெளியில் வைத்து விடவும்.

பிறகு திறந்து பார்த்தால் திக்கான கெட்டித் தயிர் தயாராக இருக்கும்.

அடி பிடித்த பாத்திரத்தை எளிதில் சுத்தம் செய்வது எப்படி?

பொதுவாக நாம் காய்கறிகள் அல்லது கிழங்கு வகைகளை சமைக்கும் போது அவை அடிபிடித்து விடுகிறது. அவற்றை பின்னர் சுரண்டி எடுப்பதற்கு ரொம்பவே சிரமமாகவும் இருக்கிறது.

இந்த மாதிரியான சமயங்களில் சிறிது நேரம் அதை மூடிப் போட்டு வைத்து விட்டால் போதும், கொஞ்ச நேரத்தில் ஆவி அதனுள் சேர்ந்து ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும். அதன் பிறகு நீங்கள் கரண்டி வைத்து எடுத்தால் அடிப்பிடித்த தடம் தெரியாமல் இலகுவாக வந்துவிடும். பிறகு வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளலாம். இப்படி செய்யும் போது அடிப்பிடித்த பாத்திரங்களை தேய்ப்பதற்கும் சுலபமாக இருக்கும்.

காபி தூளுடன் டீ தூள் சேர்ப்பது நன்மையா?

காபி தூளுடன் டீ தூள் சேர்த்தால் சுவையாக இருக்கும் என்று கூறப்படுவது உண்டு. ஆனால் காபி தூள், டீ தூள் சேர்ப்பது அவ்வளவு நல்லதல்ல. எனவே இந்த ஒரு தவறை ஒருபோதும் செய்ய வேண்டாம். காபி பீன்களில் இருக்கும் தன்மையும், தேயிலையில் இருக்கக் கூடிய தன்மையும் வெவ்வேறானவை இதை ஒன்றாக கலந்து பருகுவது என்பது தவறான செயல்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.