ஊழியர்களைவிட உயர் அதிகாரிகளுக்கு 184 மடங்கு அதிக சம்பளம்… என்ன காரணம்?

இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு சம்பளம் வந்தாலும் போதவில்லை என்பதுதான் எல்லாத் தரப்பினரருடைய புலம்பலாகவும் இருக்கிறது. ஆனால், உண்மையிலேயே ஆய்வுகள் சொல்லும் முடிவுகளில் ஒரு நிறுவனத்தின் சராசரி ஊழியர்களின் சம்பளம் உயர்வதற்கும் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சம்பளம் உயர்வதற்கும் இடையிலான வித்தியாசம் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு இருக்கிறது என்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.

Corporate companies

இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் ஒரு சராசரி ஊழயரின் சம்பளத்தைவிட உயர் அதிகாரிகளின் சம்பளம் 184 மடங்கு அதிகமாக உயர்ந்திருக்கிறது. சராசரி ஊழியரின் ஆண்டு சம்பளம் ரூ.6.4 லட்சமாக உள்ள நிலையில், உயர் அதிகாரிகளின் ஆண்டு சம்பளம் ரூ.11.8 கோடியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வும் சமமாக உயராமல் பல மடங்கு வித்தியாசத்துடன் உயர்வதையும் பார்க்க முடிகிறது.

இந்தப் புள்ளிவிவரங்கள் நிஃப்டி 100 குறியீட்டில் உள்ள 100 நிறுவனங்களில் 76 நிறுவனங்களின் சம்பள விகிதங்களை ஆய்வு செய்ததன் மூலம் பெறப்பட்டிருக்கிறது.

இந்தப் புள்ளிவிவரங்களின்படி, அதிகபட்சமாக பார்மா துறையில் சராசரி ஊழியர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான சம்பள வித்தியாசம் 340 மடங்கு உள்ளது. முக்கியமாக, பார்மா, ஆட்டோமொபைல், டெலிகாம், சாஃப்ட்வேர், என்.பி.எஃப்.சி ஆகிய துறைகளில் சம்பள வித்தியாசம் மிக அதிகமாக உள்ளது.

salary

நிறுவனத்தின் வளர்ச்சியில் எல்லோருக்குமே கணிசமான பங்கு இருக்கும் சூழலில், உயர் அதிகாரிகளுக்கு மட்டும் பல மடங்கு சம்பள உயர்வு கொடுக்கப்படுவது ஏன்… சராசரி ஊழியர்களின் சம்பள உயர்வு மிகக் குறைவாகவே இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

உலகில் உள்ள மொத்த செல்வத்தில் 80% வெறும் 20% மக்களிடம் குவிந்திருக்கிறது என்று அடிக்கடி புள்ளிவிவரங்கள் வெளியாவதைப் பார்த்திருக்கிறோம். இப்படி பெரும்பகுதி ஊழியர்களின் சம்பளம் உயராமல், ஒரு சில உயர் அதிகாரிகளின் சம்பளம் மட்டுமே உயர்ந்தால் எப்படி செல்வம் பரவலாக்கப்படும். ஒரு சிலரிடம் மட்டுமே பெரும்பகுதி செல்வம் குவிவதற்கான சூழலே உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.