சென்னையை சேர்ந்த இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது.
இருப்பினும் 16 வயதேயான பிரக்ஞானந்தா 18 வயது முடிந்ததும் பணியில் சேர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தா தற்போது சென்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் விளையாடினார். காலிறுதிச்சுற்றில் சீன வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்ற பிரக்ஞானந்தா, அரையிறுதியில் நெதர்லாந்தை வீரரை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு..!
முதல் இந்தியர்
இறுதிப்போட்டியில் சீன வீரருடன் மோதிய பிரக்ஞானந்தா, ஒரு சிறு தவறு செய்ததால் சாம்பியன் பட்டத்தை இழந்தார். முதல்முறையாக இந்த போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
ஒலிம்பியாட்
மேலும் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மாதம் தொடங்கும் ஒலிம்பியாட் செஸ் போட்டியிலும் பிரக்ஞானந்தா பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அவருக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விழாவில் இந்த வேலை வாய்ப்புக்கான ஒப்பந்தம் கடிதம் பிரக்ஞானந்தாவுக்கு முறைப்படி வழங்கப்பட்டது.
16 வயதில் வேலைவாய்ப்பு
இருப்பினும் தற்போது பிரக்ஞானந்தாவுக்கு தற்போது 16 வயது ஆவதால் 18 வயதை எட்டியதும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பட்டியலில் இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டது. பிரக்ஞானந்தாவின் சம்பளம் குறித்த தகவல் வெளிவரவில்லை என்றாலும் ஆண்டுக்கு 7 இலக்க எண்களில் அவருடைய சம்பளம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெருமை
இந்த விழாவில் பேசிய பிரக்ஞானந்தா, ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் எனக்கு கிடைத்த இந்த பதவி மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இருக்கும் பல செஸ் வீரர்களை எனக்கு தெரியும் என்றும் அவர்களும் எனக்கு வேலை கிடைத்ததால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும் கூறினார்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இணைந்தது மிகப்பெரிய பெருமை என்றும் எனது வாழ்க்கையில் இந்த பணி மிகப்பெரிய ஆதரவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
விளையாட்டு வீரர்
இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வைத்யா இந்த விழாவில் பேசிய போது ‘இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மிகச்சிறந்த வகையில் செயல்பட்டு வருகிறது என்றும், அந்த வகையில் பிரக்ஞானந்தா வேலை வாய்ப்பு கொடுத்ததை நாங்கள் பெருமையாக கருதுகிறோம்’ என்றும் தெரிவித்துள்ளார்.
Indian Chess Champion Praggnanandhaa joins the IOC family
Indian Chess Champion Praggnanandhaa joins the IOC family | 16 வயது இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வேலை கொடுத்த நிறுவனம்!