நாகை: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஹோட்டலுக்குள் புகுந்த மணல் லாரி!

வேதாரண்யம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஹோட்டலுக்குள் புகுந்த லாரியால் பாரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், தலையில் பலத்த காயமடைந்த ஓய்வு பெற்ற வேளாண் துறை அலுவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வேட்டைக்காரனிருப்பு புதுக்கடை பகுதியில் சமீரான் ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலின் உரிமையாளர் கார்த்திகேயன் இன்று காலை வழக்கம் போல ஹோட்டலை திறந்து வியாபாரம் நடத்தி வந்துள்ளார்.
image
இந்த நிலையில் நாகை – வேதாரண்யம் சாலையில் கொள்ளிடத்தில் இருந்து ஆற்று மணல் ஏற்றி வந்த லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஹோட்டலுக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியது. இதில், உணவு டீ சாப்பிட்டு கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோர் உடனடியாக அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
image
இந்நிலையில் அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற வேளாண் துறை அலுவலர் சிவசண்முகம் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக நாகை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.