இலங்கை அணி  வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி   10 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி தனது முதல் இன்னிங்சில் 365 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 506 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி போட்டியின் இறுதி நாளான இன்று (27)  அனைத்து விக்கெட்களையும் இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் லிட்டன் தாஸ் 52 ஓட்டங்களையும்இ மொசாடெக் ஹொசைன் 58 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் அசித பெர்ணான்டோ 6 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித்த 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

29 ஓட்ட  வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

ஓசத பெர்ணான்டோ 21 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 7 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த நிலையில் இலங்கை அணி தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.