எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் பிசியாக இருந்தாலும் மற்ற நிறுவன பணிகளிலும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார் என்பதைச் சமீபத்தில் புதிய திட்டத்திற்காக அரசிடம் அனுமதி பெறும் பணிகளை வேகமாகச் செய்து வருவதன் மூலம் தனது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
டிவிட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் முயற்சி செய்யும் போது பலரும் எலான் மஸ்க்-ஆல் இப்புதிய நிறுவனத்தைச் சமாளிக்க முடியாது எனக் கூறினார்கள். ஆனால் இன்று டெஸ்லா நிறுவனத்தின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு ஹோட்டல் மற்றும் தியேட்டர் துறையில் இறங்கியுள்ளார் எலான் மஸ்க்.
2018ல் ஒரு டிவீட் மூலம் ஒரு ஐடியாவை பகிர்ந்த எலான் மஸ்க் இன்று இத்திட்டத்தை நினைவாக்கியுள்ளார்.
அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ-க்கள் யார் யார் தெரியுமா?
எலான் மஸ்க்
எலான் மஸ்க் தலைமை வகிக்கும் டெஸ்லா நிறுவனம், வாரத்தில் 7 நாளும் 24 மணிநேரமும் இயங்கும் உணவகத்தை அமெரிக்காவின் முக்கியமான வர்த்தகப் பகுதியான ஹாலிவுட்-ல் அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லா சூப்பர்சார்ஜர்
டெஸ்லா எலக்ட்ரிக் கார்களைச் சார்ஜ் செய்ய அமெரிக்கா முழுவதும் அமைக்கப்பட்டு இருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் சூப்பர்சார்ஜர்களைச் சுற்றி வர்த்தகத்தை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்ட எலான் மஸ்க் 2018ல் சூப்பர்சார்ஜர் ஸ்டேஷன்-க்கு வரும் மக்களுக்குப் பயன்படவும், ஈடுப்பாடுடன் இருக்கும், ட்ரைவ்-இன் தியேட்டர், உணவகத்தை அமைக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.
லாஜ் ஏஞ்சல்ஸ்
இவை அனைத்தும் முதலில் லாஜ் ஏஞ்சல்ஸ் பகுதியில் முதலில் அமைக்கப்படும் என்று 2018ல் அறிவித்தது போலவே எலான் மஸ்க் தற்போது புதிய உணவகத்தை 7001 W. சாண்டா மோனிகா Blvd. ஹாலிவுட்டில் அமைக்க அரசு அமைப்புகளிடம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளார்.
9300 சதுரடி
இப்புதிய சூப்பர் சார்ஜர் + உணவகம் 9300 சதுரடியில் அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் டிரைவ் -இன் தியேட்டர், உணவகம், 28 சூப்பர் சார்ஜர் இருக்கும் எனத் தெரிகிறது. இந்த உணவகம் வாரத்தின் 7 நாளும் 24 மணிநேரமும் இயங்கும் என்பதால் பெரிய அளவிலான வர்த்தகத்தை ஈர்க்க முடியும் என எலான் மஸ்க் நம்புகிறார்.
Elon Musk entering into food and movie industry with Futuristic Tesla Diner place
Elon Musk entering into food and movie industry with Futuristic Tesla Diner place ஹோட்டல், தியேட்டர் வர்த்தகத்தில் இறங்கும் எலான் மஸ்க்.. உண்மையிலேயே சூப்பர் திட்டம்..!