பழனி முருகன் கோயிலில் கார்த்தி தரிசனம்
நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துவரும் சர்தார், விருமன் உள்ளிட்ட படங்களின் அப்டேட்களும் வெளியாகின. சர்தார் தீபாவளி தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்திருந்தனர் . கார்த்தியின் பிறந்தநாளுக்கு திரைத்துறை பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் கார்த்தி தனது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அப்பா சிவகுமார் மற்றும் குடும்பத்தினர் உடன் பழனி முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பிறகு அங்கு ரசிகர்களைச் சந்தித்துள்ளார். அவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.