’நன்றி தமிழ்நாடு; நேற்றைய வருகை மறக்க முடியாதது’ என பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
31,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழ் நாட்டிற்கு நேற்று வருகை தந்திருந்தார் பிரதமர் மோடி. அவருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
நேற்றையை தமிழக வருகை தொடர்பாக “நன்றி தமிழ்நாடு; நேற்றைய வருகை மறக்க முடியாதது” என்று இன்று ட்விட்டரில் ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி, நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் என குறிப்பிட்டு 2.07 நிமிட வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை குறித்து ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழகம் பிரதமர் நரேந்திர மோடியை விரும்புகிறது. பிரதமர் மோடி மீது அன்பும் பாசமும் தமிழகத்தில் பெருகி வருகிறது” என தெரிவித்ததுடன், பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை குறித்த புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM