விக்ரம் பிரபு நடிக்கும் ரத்தமும் சதையும்
5/27/2022 3:50:46 PM
கும்கி படத்திற்கு பிறகு விக்ரம் பிரபுவிற்கு திருப்பத்தை தந்துள்ள படம் டானாக்காரன். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சன ரிதீயாகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. குறிப்பாக இப்படத்தில் விக்ரம் பிரபுவின் சிறப்பான நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது.இந்த நிலையில் விக்ரம் பிரபுவின் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு இரத்தமும் சதையும் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதையை எழுதி, அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.