இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான பாரத் ட்ரோன் மஹாத்சவ் 2022-ஐ பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு ட்ரோன் செயல் விளக்கங்கள், 70-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ஆளில்லா விமானங்களின் பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளையும் காட்சிப்படுத்தப்பட்டன.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
தொழில்நுட்பத்தால் விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டு வருகிறது. மண் சுகாதார அட்டைகள், இ-நாம் அல்லது ட்ரோன்கள் எதுவாக இருந்தாலும் அவை விவசாயத் துறையில் கேம் சேஞ்சராக உருவாகி வருகின்றன.
கடந்த எட்டு ஆண்டுகளில், தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை நாங்கள் கண்டுள்ளோம். விவசாயிகள் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்வதை நாங்கள் கண்டுள்ளோம்.
விவசாயத் துறை இப்போது தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாறுகிறது. கடைசி மைல் சுகாதார விநியோகத்தை மேம்படுத்துவதில் ட்ரோன்கள் முக்கியமானதாக இருக்கும். கோவிட் காலத்தில் கூட ட்ரோன்கள் தடுப்பூசிகளை நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு வழங்க உதவியது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. சென்னை விமான நிலையத்தில் சந்திப்பு- அ.தி.மு.க. தலைவர்களை சமரசம் செய்த மோடி