பனாஜி: பணம் கொடுத்து மத மாற்றத்தில் ஈடுபட்ட பாதிரியார் மற்றும் அவரது மனைவியை கோவா போலீசார் கைது செய்தனர். டோமினிக் டி சூசா என்ற பாதிரியார் மற்றும் அவரது மனைவி ஜோன் ஆகியோர், பணம் கொடுத்தும், நோயை குணமாக்குவதாக கூறி மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாக இரண்டு பேர் மபுசா போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து அவர்கள் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இரு சமூகங்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டது மற்றும் மத உணர்வுகளை சீண்டும் வகையில் வேண்டுமென்றே செயல்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், பனாஜி அருகேயுள்ள சலிகோவா கிராமத்தில் தங்கியிருந்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பனாஜி: பணம் கொடுத்து மத மாற்றத்தில் ஈடுபட்ட பாதிரியார் மற்றும் அவரது மனைவியை கோவா போலீசார் கைது செய்தனர்.டோமினிக் டி சூசா என்ற பாதிரியார் மற்றும் அவரது மனைவி ஜோன் ஆகியோர், பணம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.