அமெரிக்காவில், டெக்சாஸ் பள்ளிக்கூட துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஆசிரியை ஒருவரின் கணவர், மனைவி உயிரிழந்த இரண்டாவது நாளிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார்.
செவ்வாய்கிழமை டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பள்ளிக்குள் புகுந்த 18 வயது இளைஞர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார்.
அப்போது வகுப்பறையில் இருந்த ஆசிரியை இர்மா கார்சியா ((Irma Garcia)) அங்கிருந்து தப்பியோடாமல் குழந்தைகளை பாதுகாக்கும் முயற்சியில் தனது உயிரை தியாகம் செய்தார். அவர் உயிரிழந்த இரண்டாவது நாளே அவரது கணவர் ஜோ மாரடைப்பால் காலமானார்.