கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஆன்ட்ரியா. நடிப்பு மட்டுமல்லாது பாடகியாகவும் வலம் வரும் இவர், சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெறற ஊ சொல்றீயா மாமா என்ற பாடலை பாடியிருந்தார்.
இந்த படம் பட்டி தொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பியது. அதேபோல் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திற்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தியுடன் நடித்த ஆன்ட்ரியா, அடுத்து மங்காத்த அரண்மனை உள்ளிட்ட ஏராமளாக படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் முதன்மை கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
மேலும அனல்மேலே பனித்துளி, வட்டம், கா, நோ என்டரி என ஆண்டரியா நடிப்பில் பல படங்களில் வெளியீட்டிற்காக வரிசைகட்டி காத்திருக்கின்றன. இது மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆன்ட்ரியா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த பதிவுகள் வைரலாகி வரும் நிலையில், லாக்டவுன் காலத்தில் தான் பேக்கிங் செய்த ரெசிபி தொடர்பான வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.6 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ள ஆண்டரியா சமீபத்தில் எகிப்த் பாரிஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அந்த வகையில் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து இவர் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை இன்ஸ்டாகராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கமலின் நடிப்பில் தயாராகியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், ஆண்டரியாவின் இந்த புகைப்படத் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில், இது தப்பே இல்லை என்றும், 10 வருடங்ளுக்கு பிறகு இதே சேலையில் இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் நீங்கள் 10 வருடங்கள் ஆன பின்னும் இன்னும் அப்படியேதான் இருக்கிறீர்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஆன்ட்ரியா கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 மற்றும் உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் கமலுடன் ஆண்டரியா இருக்கும் இந்த படம் விஸ்வரூபம் படத்தின் போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“