ரஷ்யாவுடன் பண்டமாற்று வர்த்தகம் செய்வோம் என ஈரான் அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான அதன் படையெடுப்பு காரணமாக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் விளைவாக மேற்கத்திய இறக்குமதிகள் குறைந்துவிட்டதால், ரஷ்யா அதன் தொழில்துறைக்கான உபகரணங்கள் மற்றும் கூறுகள் பற்றக்குறையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவிற்கு எஃகுக்கு ஈடாக கார் பாகங்கள் மற்றும் எரிவாயு டர்பைன்களை வழங்க உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
கைப்பற்றிவிட்டோம்! ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் முக்கிய அறிவிப்பு
ஈரானிய தொழில், சுரங்க மற்றும் வர்த்தக அமைச்சர் Reza Fatemi Amin கூறினார்.
ஈரான் தனது உலோகங்கள் மற்றும் சுரங்கத் துறைக்கான மூலப்பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக ரஷ்யாவுடன் பண்டமாற்று வர்த்தகத்தைப் பயன்படுத்தும்.
ஈரான் ரஷ்யாவிலிருந்து ஜிங்க், ஈயம் மற்றும் அலுமினாவை இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.