ஒரு புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலானது. பேஸ்புக் பயனர் ஒருவரால் இந்த படம் பகிரப்பட்டது. அதில், இது இந்திய அரசு வெளியிட்ட கடவுள் ராமரின் புகைப்படத்துடன் கூடிய புதிய
500 ரூபாய் நோட்டு
என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படமே அச்சிடப்பட்டிருக்கும். அதற்கு மாறாக சம்பந்தப்பட்ட நபர் வெளியிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
Starlink Satellite: ஸ்டார்லிங் சேட்டிலைட்டை அழித்து விடுவோம் – எச்சரிக்கும் சீனா!
அவர் அந்த பேஸ்புக் பதிவில், “500 ரூபாய் நோட்டில் ஸ்ரீ ராம சந்திரனின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், இதன் உண்மை தன்மை குறித்து தெரியவில்லை. யாருக்காவது இது குறித்து தெரிந்தால் சொல்லுங்கள். ஜெய் ஸ்ரீ ராம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
உண்மை என்ன?
இதனைத் தொடர்ந்து நமது ஆய்வை விரிவுப்படுத்தினோம். புகைப்படத்தின் உண்மைத் தன்மையை அறிய முதலில் ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுகள் பட்டியலை முதலில் சரிபார்த்தோம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஸ்கேன் செய்து பார்த்தபோது, ராமர் படத்துடன் கூடிய புதிய ரூ.500 நோட்டு அறிமுகம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
மேலும், ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பிரிவில், ‘மகாத்மா காந்தி (புதிய) சீரிஸ்’ தான் சமீபத்திய ரூபாய் நோட்டுகள் எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், 2016 ஆம் ஆண்டிற்கு முந்தைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
Mark Zuckerberg: பேஸ்புக் மார்க் கைது? டெக் துறையில் பரபரப்பு!
அதுமட்டுமில்லாமல், இப்போது புழக்கத்தில் இருக்கும் உண்மையான 500 ரூபாய் நோட்டின் புகைப்படமும் ஆர்பிஐ தளத்தில் இருந்து கிடைத்தது. அதையும் உங்கள் பார்வைக்காக இங்கே கொடுத்துள்ளோம்.
உண்மையா? போலியா?
எனவே, ராமருடன் இருக்கும் ரூ.500 நோட்டு புகைப்பட எடிட்டிங் மென்பொருளைப் பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்டது என்று தெளிவாகத் தெரிகிறது. அனைத்து ஆய்வுகளையும் சேர்த்து பார்த்தால், ராமர் படத்துடன் கூடிய புதிய ரூ.500 நோட்டு இல்லை என்பது உறுதி. எனவே, எப்போதும் போலிகளை நம்ப வேண்டாம்.