ஓலா: 1000 ஏக்கர் நிலம் யாருக்கிட்ட இருக்கு..? 6 மாநிலத்துடன் பேச்சுவார்த்தை.. எதற்காக தெரியுமா..?

இரு சக்கர எலக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடித்து எறிந்ததற்குப் பேட்டரி-யின் தரம் தான் முக்கியக் காரணம் என DRDO ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவறுகளைச் சரி செய்யும் பணிகளையும், அரசுக்கு விளக்கும் கொடுக்கும் பணிகளைத் துவங்கியுள்ளது.

ஆனால் இதேவேளையில் ஓலா நிறுவனம் மிகப்பெரிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் பிரியரா நீங்க.. மிந்த்ராவின் சூப்பர் அறிவிப்ப பாருங்க?

ஓலா எலக்ட்ரிக்

ஓலா எலக்ட்ரிக்

ஓலா எலக்ட்ரிக் புதிதாகப் பேட்டரி தயாரிப்பு மற்றும் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலைகளை அமைக்க நிலம் தேடி வருவதாகவும், பல மாநிலங்களுடன் இதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வேகமாக வரும் வளர்ச்சி அடைந்து வரும் EV சந்தையில் பெரும் பகுதியை ஓலா கைப்பற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

2 தொழிற்சாலை

2 தொழிற்சாலை

ஓலா நிறுவனத்தின் வாகன உற்பத்தி மேம்பாட்டுக்குத் தடையாக இருக்கு பேட்டரி தட்டுப்பாட்டையும், பேட்டரி தரம் சார்ந்த பிரச்சனைகளைச் சரி செய்யச் செல் ஜிகாபேக்டரி மற்றும் எலக்ட்ரிக் கார் உற்பத்தி இறங்குவதற்காகப் புதிய தொழிற்சாலையை அமைக்க ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சுமார் 10,000 கோடி முதலீட்டை செய்ய முடிவு செய்துள்ளது.

1,000 ஏக்கர் நிலம்
 

1,000 ஏக்கர் நிலம்

இந்தச் செல் ஜிகாபேக்டரி மற்றும் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையை அமைக்க 1,000 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், இதற்கான நிலத்தைத் தேடும் பணியில் ஓலா இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

கார் உற்பத்தி

கார் உற்பத்தி

கார் உற்பத்தியில் ஆரம்பம் முதல் ஆர்வம் காட்டி வரும் ஓலா நிறுவனம் ஏற்கனவே ஒரு கான்செப்ட் கார்-ஐ உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 1,000 ஏக்கர் நிலத்திற்காக ஓலா மொபிலிட்டி நிறுவனம் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது ஓலா.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

ஓலா மொபிலிட்டி நிறுவனம் ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 ஏக்கரில் இரு சக்கர வாகன தொழிற்சாலையை அமைத்து இரு சக்கர வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் புதிய மென்பொருள் புதுப்பிப்பு உடன் புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.

ரூ.10000 கோடி முதலீடு

ரூ.10000 கோடி முதலீடு

இந்நிலையில் தற்போது புதிதாகக் கைப்பற்ற திட்டமிடும் 1000 ஏக்கர் நிலத்தில் ரூ.10000 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் செல் ஜிகா பேக்ட்ரியில் தயாரிக்கப்படும் பேட்டரிகளைக் கிருஷ்ணகிரி இரு சக்கர வாகன தொழிற்சாலைக்கும், புதிதாக அமைக்கப்படும் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலைக்கும் அனுப்ப உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ola looking for 1000 acres land for new cell gigafactory, electric car factory

Ola looking for 1000 acres land for new cell gigafactory, electric car factory ஓலா: 1000 ஏக்கர் நிலம் யாருக்கிட்ட இருக்கு..? 6 மாநிலத்துடன் பேச்சுவார்த்தை.. எதற்காகத் தெரியுமா..?

Story first published: Friday, May 27, 2022, 18:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.