பிரதமர் மோடி நேற்று சென்னை வந்து ரூ.31,500 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியின் சென்னை வருகை பல்வேறு கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி வருகை குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:-
பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பேசியது கட்சி கூட்டத்தில் பேசியது போல் இருந்தது. நேரு உள்விளையாட்டரங்க நிகழ்ச்சியில் தமிழை உயர்த்திப் பிடித்திருக்கிறார் பிதரமர் மோடி.
தமிழகத்தில் தனக்கு பெரிய வரவேற்பு கிடைத்ததை பார்த்து கட்சி நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. ட்ரோன்கள் விவசாயத்துறையில் கேம் சேஞ்சராக மாறி வருகிறது- பிரதமர் மோடி