இலங்கையில் என்ன நடக்கிறது….. வெளிநாட்டு மக்களிடம் ஜேர்மன் தம்பதியினர் விடுத்துள்ள கோரிக்கை


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வன்முறைகள் வெடிப்பதாக வெளிவரும் செய்திகளினால் சுற்றுலா பயணிகள் இலங்கை செல்வதனை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட ஜேர்மன் தம்பதியினர் தற்போதைய நிலைமை தொடர்பில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் தற்போதைய நிலை

இலங்கையில் என்ன நடக்கிறது..... வெளிநாட்டு மக்களிடம் ஜேர்மன் தம்பதியினர் விடுத்துள்ள கோரிக்கை

அந்த காணொளியில் தாங்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்ததாகவும் இலங்கையின் பல பகுதிகளுக்கு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

“நாங்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை வந்தோம். நாங்கள் முதலில் கண்டியில் இருந்து பயணத்தை ஆரம்பித்தோம். எல்ல பகுதிக்கு ரயிலில் சென்றோம்.

அதேபோன்று அருகம்பே, திருகோணமலை சென்றோம். இறுதியான சீகிரியா மற்றும் ஹபரண பகுதிகளுக்கு செல்லவுள்ளோம்.

வெளிநாட்டவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கையில் என்ன நடக்கிறது..... வெளிநாட்டு மக்களிடம் ஜேர்மன் தம்பதியினர் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை மக்கள் மிகவும் இரக்க குணம் கொண்டவர்கள். நாங்கள் சந்தித்த ஒவ்வொருவரும் மிகவும் அன்பானவர்கள்.

இலங்கை செல்ல அச்சப்பட வேண்டாம்.

இங்கு கலவரங்கள் இல்லை. இங்கு மிகவும் பாதுகாப்பாக உள்ளது. யாரும் அச்சப்பட வேண்டாம் என நாங்கள் ஜேர்மனியில் வாழும் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

தயவு செய்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுங்கள் என நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோ” என குறித்த தம்பதியினர் காணொளி மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You My Like This Video 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.