சருமம் பொலிவு பெற இயற்கை வழிகள் பற்றி தெரிந்துகொள்ள பலருக்கும் ஆர்வமும் தேடலும் இருக்கும். குறிப்பாக, அதற்கான உணவுகள் பற்றி அறிய நினைப்பார்கள்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/WhatsApp_Image_2020_04_11_at_13_17_57.jpeg)
”பல காரணங்களால் முகம் வறண்டு, வாட்டத்துடன் காணப்படுபவர்கள் எளிய முறையில், வீட்டில் கிடைக்கக்கூடிய இயற்கைப் பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் முகம் பளபளப்பாக மாறுவதுடன் மென்மையாகவும் ஆகும்” எனக் கூறும் அழகுக்கலை நிபுணர் வினோத் பாமா, முகப்பொலிவுக்கான ஹோம்மேடு ஜூஸ் தயாரிக்கும் வழிமுறைகளை நம்மிடம் பகிர்கிறார்.
தேவையான பொருள்கள்
1. கேரட்
2. இஞ்சி
3. கொத்தமல்லி
4. தேங்காய்ப்பால் அல்லது இளநீர்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/toa_heftiba_2bGL3ydxJzs_unsplash.jpeg)
கேரட்டில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதற்கும், சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் உதவுகிறது.
இஞ்சி Anti-inflammatory மற்றும் Antibacterial ஆக செயல்படுவதால் முகத்தில் உள்ள பாக்டீரியா, பரு, ரேஷஸ் போன்றவற்றை சரி செய்ய மிக உதவியாக இருக்கும்.
கொத்தமல்லி சருமத்தில் மெலனினை அதிகப்படுத்த உதவுவதால் இதனையும் சருமப் பராமரிப்புக்காக சேர்த்துக்கொள்வது நல்லது.
இவை மூன்றையும் ஒன்றாக அரைத்து, அதனுடன் தேங்காய்ப்பால் அல்லது இளநீர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். எளிதாக ஜூஸ் தயாராகிவிடும். இதனை தொடர்ந்து அருந்தி வர, சருமம் மேம்படுவதை நன்கு உணர முடியும். இந்த ஜூஸை வாரத்தில் மூன்று முறையோ, ஃபிரெஷ்ஷாக காய்கறிகள் கிடைத்தால் தினமுமோ எடுத்துக்கொள்ளலாம்.
உணவு மட்டுமல்லாமல், சருமப் பராமரிப்பிலும் சில விஷயங்களை மேற்கொண்டு வந்தால் சருமம் விரைவில் பொலிவடையும். அதற்கு சில டிப்ஸ்…
* உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும், லெமன் ஜூஸ் சேர்த்து முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவவும். இதனையும் வாரத்திற்கு மூன்று நாள்கள் செய்து வர சருமம் பொலிவடையும்.
* பப்பாளியை மசித்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்குப் பின் கழுவி வரவும்.
இந்த இரண்டையும் தொடர்ந்து செய்து வருவதுடன், கூடவே முகப் பொலிவுக்கான ஜூஸையும் குடித்து வந்தால் முகம் மென்மையாகவும் , பளபளப்பாகவும் ஜொலிக்கும்.