வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மற்ற நாடுகளைவிட சிறந்த இடத்தில் இந்தியா உள்ளது என ரிசர்வ் வங்கி தகவல் அளித்துள்ளது.
கடந்த பிப்., 24-ம் தேதி துவங்கி தற்போதுவரை உக்ரைன் – ரஷ்ய போர் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்திய வர்த்தகம் பாதிப்படைந்து பின்னர் மீண்டது. தற்போது ஆர்பிஐ பணப்புழக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது.
ஆர்பிஐ பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டுவரும் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தாக்கம், உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாக உலக நாட்டு வங்கிகள் பல, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்தன. மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்திய ரிசர்வ் வங்கி எளிதில் இந்த நெருக்கடியை கடந்து வருவதாக ஆர்பிஐ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
மேலும் சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனாவில் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவது, பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தின்படி தொழிற்சாலைகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல பிரச்னைகளின் மற்ற உலக நாடுகள் சிக்கித் தவிப்பதால் அவை பொருளாதார ரீதியில் மீண்டுவர பல காலம் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement