‘என் தலைவனை விமர்சித்தால் அடிப்போம்; சாரி… மிதிப்போம்!’: டி.ஆர்.பி ராஜா பகிரங்க எச்சரிக்கை

என் தலைவனை விமர்சித்தால் அடிப்போம் சாரி மிதிப்போம் என்று திமுகவின் மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவும், திமுக எம்பி டிஆர் பாலுவின் மகனுமான டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்துள்ள திமுகவில் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் தொண்டர்கள் என பலரும் ஓராண்டு காலம் நல்லாட்சி பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது மக்களுக்கான பொற்காலம் என்று புகழ்ந்து பேசி வருகின்றனர்.

அதே சமயம் மறுமுனையில் எதிர்கட்சிகள் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து குறை கூறி வரும் அதிமுக தற்போது ஓராண்டு நிறைவு செய்தது தொடர்பாக திமுகவின் விளம்பரங்களை வைத்து கடுமையான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இதனால் தமிழக அரசியல் களம் பெரும் பரபப்பாக இயங்கி வரும் நிலையில், இந்த பரபரப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபகாலமாக முதல்வர் ஸ்டாவின் மீதான விமர்சனம் அதிகளவில் வந்துகொண்டிருக்கும் நிலையில், திமுகவினர் இதற்கு பதிலுடியும் கொடுத்து வருகின்றனர. அந்த வகையில் தற்போது டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

கருத்து சொல்லுங்கள் , மாற்று கருத்து சொல்லுங்கள்… இல்ல நாங்க சொல்றது பொய் என்று கூட வாதாடுங்கள்… நாகரீகமாக பதில் வரும். ஆனா என் தலைவன விமர்சிக்க உங்க எவனுக்கும் தகுதியில்ல. மீறி பேசுனா உங்கப்பனாவே இருந்தாலும் அடிப்போம்… Sorry… மிதிப்போம்.

என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு வைராகி வரும் நிலையில், இந்த கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் திமுக ஐடிவிங் தலைவராக நியமிக்கப்பட்ட டிஆர்பி ராஜா சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நிலையில், அவரின ஐடி விங்கும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.  மேலும் தற்போது எம்எல்ஏவாக உள்ள டிஆர்பி ராஜா விரைவில் அமைச்சர் பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.