லடாக் ஆற்றில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.
இந்திய ராணுவ வீரர்கள் 26 பேருடன் ராணுவ வாகனம் லடாக்கின் பர்தாபூர் என்ற இடத்திலிருந்து ஹனிப் என்ற இடத்துக்கு கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால், ஷியோக் என்ற ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சுமார் 60 அடி ஆழத்தில் வாகனம் கவிழ்ந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் விபத்திற்குள்ளான ராணுவ வீரர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
படுகாயமடைந்த 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
‘லடாக்கில் பேருந்து விபத்துக்குள்ளானதில் நாங்கள் எங்கள் துணிச்சலான ராணுவ வீரர்களை இழந்து தவிக்கிறோம். என் இரங்கல் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இருக்கும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது’ என தெரிவித்துள்ளார்.
Anguished by the bus accident in Ladakh in which we have lost our brave army personnel. My thoughts are with the bereaved families. I hope those injured recover at the earliest. All possible assistance is being given to the affected.
— Narendra Modi (@narendramodi) May 27, 2022